sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 754
- Thread Author
- #1
2
செங்கனியன் சொன்னது கேட்டு நண்பர்களுக்கு சிரிப்பு ஒன்றுதான் வரவில்லை. செங்கனியன் பார்க்க டெரராக இருப்பான். பேசும்போது கூட மற்றவர்கள் பயந்து விடுவார்கள்.
ஆனால் அவன் எப்போதும் வெண்பாவை கஷ்டப்படுத்த நினைத்தது இல்லை. வெண்பாவை பார்த்தால் பூனை குட்டி போல் அவனின் மனம் சுருண்டு விடும். அவனின் ஒரே பலவீனம் வெண்பா மட்டும்தான். அது நண்பர்களுக்கு தெளிவாக தெரியும். ஆனால் காதலிக்கும் போது இருக்கும் அதே செங்கனியன் திருமணத்திற்கு பிறகும் இருப்பானா?
அவன் கையில் இருந்த சரக்கை வாங்கி ஓரம் வைத்தான் நண்பன். "இன்னைக்கு உனது பர்ஸ்ட் நைட். போய் கொண்டாடும் வேலையை பாரு.." என்றான்.
செங்கனியன் உதட்டை சுளித்தான். "எனக்கு ஒன்னும் அவ மேல லவ் கிடையாது. நான் ஒன்னும் அவளுக்காக ஏங்கிப் போய் இருக்கவும் கிடையாது. எனக்கு இந்த பர்ஸ்ட் நைட் வேணாம்.." என்று சொன்னான்.
வேறொரு இடமாக இருந்திருந்தால் நண்பர்கள் அனைவரும் சத்தம் போட்டு சிரித்து இருப்பார்கள். அவனும் அவளும் பிரேக்அப் செய்து கொள்ள காரணமே இந்த விஷயம்தான்.
காதலிக்கும் பொழுதே அவள் தனக்கு முழுமையாக வேண்டும் என்று இவன் கேட்க, அவள் திருமணத்திற்கு முன்னால் தன்னால் கட்டில் வரை கால் பதிக்க முடியாது என்று மறுப்பாக சொல்லிவிட்டாள்.
அந்த கோபத்தில்தான் இவன் அவளை பிரேக்அப் செய்து இருந்தான்.
'நம்மை நம்பாத ஒருத்தியோடு ஏன் வாழ வேண்டும்?' என்று நினைத்தான். ஆனால் விதி இப்போது அவளைதான் இவனின் மனைவியாக்கி வைத்திருந்தது.
"சரி சரி. நீ ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடலன்னாலும் பரவால்ல. போய் ரூம்ல படுத்து தூங்கு. இல்லன்னா வந்திருக்கும் சொந்தக்காரங்க உன்னை தப்பா நினைப்பாங்க.." என்று நண்பன் கிசுகிசுப்பாக சொன்னான்.
செங்கனியன் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தான். அப்போதே தள்ளாடினான். அளவுக்கு மீறி குடித்து விட்டிருந்தான்.
மிக மிக குறைவான அளவு இவன் குடித்தால் கூட வெண்பா கோபத்தில் கத்துவாள். இவனிடம் சண்டை போடுவாள். அப்படி இருக்கும் போது இப்படி தலைகால் தெரியாமல் குடித்திருக்கிறானே, இன்று இவனை என்ன செய்வாளோ என்று நண்பர்கள் கவலைப்பட்டார்கள்.
ஆனால் இதற்கு முன்னால் இருந்த வெண்பா வேறு. இப்போது இவனை திருமணம் செய்து கொண்ட வெண்பா வேறு என்று அவர்களுக்கு யார் சொல்வது?
அப்போது இருந்த வெண்பா தனது இஷ்டப்படி வாழ்வாள். மகிழ்ச்சியையோ கோபத்தையோ முழு சுதந்திரத்தோடு தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் காட்டுவாள். ஆனால் இப்போது இருப்பவளோ ஒரு வருடத்திற்கு அந்த பணக்கார வீட்டிற்கு வாடகைக்கு எடுக்கப்பட்டவள்.
அங்கே அவளுக்கு பேச உரிமை கிடையாது. அவர்கள் சொல்லாத நேரத்தில் சிரிக்கவும் கூட உரிமை கிடையாது. அவளின் மனதை கொன்று விட்டுதான் அந்த வீட்டு மருமகளாக்கி இருந்தார்கள்.
அவள் இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அதனால் இவர்களுக்கு அவளின் கஷ்டம் எதுவும் புரியவில்லை.
தள்ளாடியபடியே தனது அறைக்கு வந்து சேர்ந்தான் செங்கனியன். அவனின் தலை முழுமையாக கலைந்து இருந்தது.
அவன் அந்த அறையின் கதவை திறந்த போது உள்ளே காலியாக இருந்தது.
பூக்கள் இருந்தன. பழங்கள் இருந்தன. அறையில் இருந்து நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. ஆனால் வெண்பாவை மட்டும் காணவில்லை. இவன் அங்கிருந்த ரெஸ்ட் ரூமை திறந்து பார்த்தான்.
அங்கேயும் அவள் இல்லை.
"எங்கே போய்ட்டா.?" தள்ளாட்டத்தோடு சுற்றிலும் பார்த்தவன் கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
"அவ வந்தா அவ மூஞ்சிக்கு நேரா உன்னை எனக்கு பிடிக்கலடின்னு சொல்ல போறேன். நானே அவளை கூட்டி போய் கடல்ல தள்ளி விட போறேன். வேணாம் எனக்கு அவ வேணாம்.." என்று கத்தினான்.
அவனின் குரல் அந்த அறையின் சுவர்களில் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்தாள் வெண்பா.
அவளைப் பார்த்ததும் உடனே எழுந்து அமர்ந்தான்.
"இன்னும் நீ கடல்ல விழலையா.?" என்று போதையில் சிரித்தபடி கேட்டான்.
மற்றொரு நேரமாக இருந்திருந்தால் "உன்னை விட்டுட்டு விழுவேனா.?" என்று கேட்டிருப்பாள். ஆனால் இப்போது முடியவில்லை.
உடைந்திருந்த மனதோடு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.
கையில் இருந்த மாத்திரை டப்பாவை அங்கிருந்து மேஜையின் மீது வைத்தவள் இவன் அருகில் வந்து நின்றாள்.
"எழுந்து நின்னா ஆசிர்வாதம் வாங்கிப்பேன்.." என்று சொன்னாள்.
அவனுக்கு பாதி போதை தெளிந்துவிட்டது. 'இவளா இப்படி சொன்னது?'
"என் கால்ல விழ போறியா?" சந்தேகத்தோடு கேட்டான்.
அவள் ஆமென்று தலையாட்ட, அவன் அவசரமாக தன் போனை எடுத்து அதில் வீடியோ கேமராவை ஆன் செய்தான்.
அவன் எழுந்து நின்றதும் வெண்பா அவனின் காலில் விழுந்து வணங்கினாள்.
இவனால் நம்பவே முடியவில்லை. ஒரு கையால் போனை பிடித்தபடி மறு கையால் தன் கண்களை கசக்கினான். 'போதை ஏறியதால கனவு கண்டுட்டு இருக்கோமோ?' என்று குழம்பியவன் தான் எடுத்த வீடியோவை நண்பர்கள் இருக்கும் குழுவுக்கு ஷேர் செய்தான்.
"இங்கே பாருங்களேன்.. வெண்பா என் கால்ல விழுந்திருக்கா.." என்று டைப் செய்து அனுப்பினான்.
வீடியோவை பார்த்த நண்பர்கள் நெற்றியில் அடித்துக் கொண்டார்கள்.
"பைத்தியம். இன்னைக்கு உங்களுக்கு பர்ஸ்ட் நைட். ஒரு சில பொண்ணுங்க புருஷன் காலில் விழுவாங்கடா.." என்று அனுப்பினான் ஒருவன்.
"இதை யாராவது வீடியோ எடுத்து அனுப்புவாங்களா? போனை தூரம் வச்சிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுடா.." என்று அனுப்பினான் இன்னொருவன்.
"வெண்பாவாவது லண்டன்ல படிச்சாலும் புருஷன் கால்ல விழுறா. என் ஆளும் இருக்காளே. நான் அவ கால்ல விழுந்தாதான் எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்கும்.." என்று மற்றொருவன் புலம்பினான்.
செங்கனியன் செல்போனில் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க, வெண்பா இன்னமும் குனிந்து அவன் காலை பற்றி கொண்டிருந்தாள். அவனாக தன்னை எழ சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் இவள் இருப்பதையே மறந்து விட்டான் போல.
"வாழ்க்கை உனக்கு செகண்ட் சான்ஸ் தந்திருக்கு. அதை ஒழுங்கா யூஸ் பண்ணிக்க.." என்று ரூபேஷ் இவனுக்கு தனி மெசேஜை அனுப்பினான்.
அரை போதையில் இருந்தவன் நண்பர்கள் இவ்வளவு சொல்கிறார்களே என்று போனை ஓரம் வைத்தான். அதன் பிறகு தான் தன் காலை பிடித்துக் கொண்டிருந்தவளை பார்த்தான்.
"ஹன்ட்ரட் இயர்ஸ் அம்சமா வாழு.." என்று வாழ்த்தினான்.
அவனை விட்டு விலகி நின்றாள்.
கட்டிலில் அமர்ந்தவன் காலை ஆட்டியபடியே அவளைப் பார்த்தான்.
"அது என்னது.?" அவள் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்திருந்த மாத்திரை டப்பாவை கை காட்டி கேட்டான்.
"டேப்லட்ஸ்.. பேபி உருவாகாம இருக்க.." அவள் தலை குனிந்தபடியே சொன்னாள்.
இவ்வளவு நேரமும் இவன் மனதில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த காதலும் இப்போது செத்துவிட்டது.
'நம் குழந்தையை சுமக்க இவளுக்கு விருப்பமில்லை. நம்மையே இவளுக்கு பிடிக்கவில்லை. முழுக்க முழுக்க பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறாள். இவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?' மனதுக்குள் நொந்து போய்விட்டான்.
தன் அருகில் இருந்த தலையணையை தூக்கி கீழே வீசினான்.
"மாத்திரை உனக்கு தேவைப்படாது. அங்கேயே படுத்துக்க.." என்று தரையை கை காட்டினான்.
அவளும் மறு வார்த்தை பேசவில்லை. அமைதியாய் போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள்.
மாத்திரைகளை எடுத்து வந்தது என்னுடைய தவறு என்று சொல்லி கெஞ்சுவாள், நம் காலில் விழுந்து அழுவாள் என்று அவனின் அப்பாவி மனம் இப்போதும் கூட எதிர்பார்த்து விட்டது.
ஆனால் அவள் அது எதையும் செய்யாமல் அமைதியாகச் சென்று படுத்து விடவும் இவன் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விட்டான். இந்த அறையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. தரையில் படுத்து இருந்தவளை பார்க்கும்போது இவனுக்கு கொலை வெறியே வந்தது.
இவளை என்ன செய்தால் நம் கோபம் தீரும் என்று யோசித்தவன் "அதுக்கு முன்னாடி எழுந்து இங்கே வா.." என்று அழைத்தான்.
அவளும் எழுந்து வந்தாள்.
"சும்மாதானே இருக்க? ஒரு ஐம்பது தோப்புகரணம் போடு. எனக்கும் டைம் பாஸ் ஆகும்.." என்றான்.
'உங்க அம்மாவுக்கு கொஞ்சம் கூட தப்பா பிறந்திருக்கடா..' என்று கடுப்பாக நினைத்தவள் அவன் சொன்ன அந்த ஐம்பது தோப்பு காரணங்களையும் போட்டாள்.
ஒவ்வொரு தோப்புக்கரணத்தையும் அவன் எண்ணினான். அவள் கால் வலியில் முகம் சுருக்குவதை ஆனந்தத்தோடு பார்த்தான்.
'இப்பதான் குளுகுளுன்னு இருக்கு..' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டவன் அவள் தோப்புக்கரணங்களை போட்டு முடித்த பிறகு "சரி வந்து என்னோட காலை பிடிச்சி விடு.." என்று சொன்னான்.
அவளும் வாய்மொழி தொலைத்த பச்சைக்கிளியாக அவன் அருகில் அமர்ந்து கால்களைப் பிடித்து விட ஆரம்பித்தாள்.
அவள் தீண்டியதில் அவனுக்கு குறுகுறுப்பு உண்டானது. வருடங்கள் எத்தனை ஓடினாலும் சரி. இவளோடு வாழ்ந்து கிழப்பருவமே எய்தினாலும் இவள் தீண்டும் ஒவ்வொரு முறையும் அவனின் இதயம் இதே போல்தான் பண் பாடும்.
அவளின் விரல்கள் பூக்கள் பூத்தால் கூட இவன் ஆச்சரியப்பட மாட்டான்.
அந்த நகங்கள் எல்லாம் நட்சத்திரங்களின் முன் பிறவியாகதான் இருக்க முடியும்.
விரல்களையும் நகங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அவள் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்ததும் ரசிப்பதை நிறுத்தி விட்டான்.
அந்த மோதிரம் இவர்களின் நிச்சயதார்த்த மோதிரம். இருவரும் பிரிவதற்கும் முன்பு வரை அவள் அதே விரலில் இவன் காதல் பரிசாக தந்த மோதிரத்தைதான் அணிந்து கொண்டிருந்தாள்.
அது ஒரு கவரிங் மோதிரமாக இருந்திருந்தாலும் இவனின் ஆசைகள் மொத்தத்தையும் தாங்கி நின்றிருந்தது. ஆனால் இப்போது இருக்கும் மோதிரம் வைரமாக இருந்தும் கூட இவனால் அதைப் பெருமிதத்தோடு பார்க்க முடியவில்லை.
அந்த மோதிரத்தை பார்த்ததும் இவனுக்குள் ஆத்திரம் கொப்பளித்தது.
தனது செல்போனை எடுத்தவன் போட்டோ கேலரிக்குள் சென்றான். போனை இவளிடம் நீட்டினான்.
"இந்த கேலரியில் பொண்ணுங்க போட்டோஸ் இருக்கு. எனக்கு யார் பொருத்தமா இருப்பாங்கன்னு நீயே சூஸ் பண்ணி சொல்லு.." என்றான்.
வெண்பா குழப்பத்தோடு போனை வாங்கினாள். போனை பார்க்காமல் அவனைப் பார்த்தாள்.
"எனக்கு உன் மூஞ்சியை கூட பிடிக்கல. ஆனா காலம் முழுக்க நான் சும்மாவே இருக்க முடியுமா? நீ இதுல யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணு. நான் அவளை என் கம்பெனியா வச்சிக்கிறேன்.." என்றான்.
இவளுக்கு கைகள் நடுங்கியது. கண்களில் கண்ணீர் வராமல் இருக்க பாடுபட்டாள்.
அவளை நக்கலாக பார்த்தவன் "அவங்க எல்லோரும் ரொம்ப நேர்மையானவங்க. பணத்துக்காகதான் பழகுறோம்ன்னு சொல்லிட்டு பழகுவாங்க. நீதான் என்னை ரொம்ப வருஷமா பார்த்துட்டு இருக்கியே! எனக்கு எந்த மாதிரி பொண்ணு இருந்தா சரியா இருக்கும்னு நீயே செலக்ட் பண்ணு.." என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்தான்.
அவன் மீது வந்த மது வாசனை இவளை முக்கால்வாசி உடைத்து விட்டது. இப்போது அவன் தந்த வேலையால் முழுவதும் உடைந்து விட்டாள்.
உள்ளுக்குள் கதறினாள். ஆனால் வெளியே கண்ணீரைக் காட்ட முடியவில்லை. அவளுக்கு எப்போதுமே தன் பலவீனத்தை வெளியில் காட்டப் பிடிக்காது.
"கீழே உட்கார்ந்து பாரு.." என்று சொன்னவன் அவள் அமர்ந்திருந்த இடத்தில் காலை நீட்டினான்.
கண்களை மூடினான். உறக்கம் வரவில்லை. ஆனாலும் முயற்சித்தான்.
தரையில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்த வெண்பா இப்போது அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளி விட்டாள். அவளின் கண்ணீர் அவள் அணிந்திருந்த தங்க வெள்ளி சரிகை புடவையில் விழுந்தது.
தொடரும்.