sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 754
- Thread Author
- #1
வில்வாவின் கேள்வியில் அதரா அதிர்ந்தாள்.
"விளையாடுறியா?" என்று கேட்டாள்.
இவன் சோகமானான். "எனக்கு ஒரு பிரச்சனை.." என்று இழுத்து சொன்னான்.
"யாரையாவது கல்யாணம் பண்ணினா அந்த பிரச்சனை தீரலாம். உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டா அது அதிகப்பிரசங்கித்தனமா இருக்கும். அதனாலதான் லவ் பண்ணட்டுமான்னு கேட்டேன்.." என்று உதட்டைச் சுளித்தபடி சொன்னான்.
"எனக்கு கல்யாணம் காதல் இரண்டு மேலயும் நம்பிக்கை இல்லை.." என்றவள் அவனின் முகத்தின் நிறத்தையும் ஆடைகளின் தரத்தையும் பார்த்துவிட்டு "நீ எந்த நாடு?" என்று கேட்டாள்.
அவன் வாய் திறக்கும் முன்னால் "சுதந்திர நாடுன்னு சொல்லாத. நான் நம்ப மாட்டேன்.." என்றாள்.
"நீ கொஞ்சம் புத்திசாலிதான்.." என்று கிண்டல் செய்தவன் "என்னோட நாடு வடக்குல இருக்கு. நாங்க டிராகன் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்.." என்று சொன்னான்.
"நீ டிராகனை பார்த்து இருக்கியா?" என்று இவள் சிறு ஆர்வத்தோடு கேட்டாள்.
நெருப்பின் வெளிச்சத்தில் தங்கம் போல் ஜொலித்த அவளின் விழிகளை பார்த்தவன் "நீ பார்த்தது இல்லையா?" என்று கேட்டான்.
இல்லை என்று உதடு பிதுக்கினாள்.
"சுதந்திர நாட்டுல இருப்பவங்களுக்கு டிராகன் மேல வெறுப்புதானே? அப்புறம் ஏன் நீ மட்டும் ஆர்வத்தோடு கேட்கிற?" என்று இவன் சந்தேகம் கேட்டான்.
"நேர்ல நான் பார்த்ததில்லை. ஆனா அது பெரிய உருவமா இருக்கும். வானத்துல வேகமா பறக்கும். நெருப்பை கக்கும்ன்னு எல்லாரும் சொல்லுவாங்க. நானும் ஓவியங்கள்ல டிராகனை பார்த்து இருக்கேன். எனக்கு டிராகனோட ஆட்சி மேல நம்பிக்கை இல்லை. டிராகன்கள் மேல எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை.." என்று மனதில் இருந்ததை வெளிப்படையாக சொன்னாள்.
அவளை பார்க்கும்போது இவனுக்கு ஆர்வம் கூடியது.
"என்கிட்ட மட்டும் கேள்வி கேக்கிற? என்னோட கேள்விக்கு நீ பதில் சொல்லு.." என்றாள் இவள்.
"டிராகன்ஸை பார்த்து இருக்கேன்.." என்று சொன்னான்.
"அது எப்படி இருக்கும்?"
"இந்த நெருப்பு போல இருக்கும்.." என்று தன் முன்னால் இருந்த நெருப்பை கை காட்டினான்.
"உனக்கு இஷ்டமா இருந்தா என்னோடு வாயேன். நான் உனக்கு டிராகனை நேர்ல காட்டுறேன்.." என்று அழைத்தான்.
"தேவையில்லை. எனக்கு இந்த சுதந்திரம்தான் வேணும்.." என்றவளை சிரிப்போடு பார்த்தவன் "எது சுதந்திரம்ன்னு உனக்கு நிச்சயமா தெரியுமா? எங்க நாட்டுல இருப்பவங்க எப்ப வேணா எங்கே வேணா போகலாம் வரலாம். என்ன வேணா சாப்பிடலாம். சுதந்திரம் அதுதான். எங்க நாட்டுல தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்க.." என்றான்.
சிறு நக்கலோடு அவனைப் பார்த்தவள் "அப்புறம் ஏன் டிராகன்கள் சுதந்திர நாட்டுக்கு வந்து எங்களை கொல்லுதுங்க?" என்று கேட்டாள்.
அவன் சோகமானான். "இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட சுதந்திர நாட்டுல இருப்பவங்களுக்கு சரியா தெரியல போல. நாங்க வாழ்வது ரெட் டிராகன்கள் ஆட்சிக்கு உட்பட்டு. ஆனா இங்கே வந்து சுதந்திர மனிதர்களை கொல்வது ப்ளூ டிராகன்களோட கூட்டம்.." என்றான்.
இவள் அதிர்ந்தாள். பிசாசை பார்ப்பது போல் அவனை பார்த்தவள் "உண்மையா சொல்றியா? இந்த உலகத்தில் இரண்டு விதமான டிராகன்கள் இருக்கா?" என்று கேட்டாள்.
"நிறைய விதமான டிராகன்கள் இருக்கு. ஆனா உன்னோட நாட்டுக்கு பக்கத்துல இருப்பது ரெட் டிராகன்களும் ப்ளூ டிரான்களும் மட்டும்தான். எங்களோட ரெட் டிராகன்கள் கண்டிப்பா மனிதர்களை கொல்ல மாட்டாங்க.." என்று சொன்னான்.
இவளுக்கு குழப்பமாக இருந்தது. இந்த உலகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று மட்டும் தெளிவாய் தெரிந்தது.
"தூக்கம் வந்தா தூங்கு. நான் உனக்கு காவல் இருக்கேன்.." என்றான் வில்வா.
அவளும் நெருப்பின் அருகிலேயே படுத்து கதகதப்போடு கண்களை மூடினாள்.
'யாரை நம்பி நீ தூங்குற? இவன் உன்னை ஏதாவது பண்ணிட்டா என்ன செய்வ?' என்று அவளின் மனசாட்சி கேள்வி எழுப்பியது.
யாராவது கொன்றாலும் பரவாயில்லை, நிரந்தர உறக்கம் கொள்ளலாம் என்று நினைக்கும் அளவுக்கு அவளின் சோர்வு அவளை வாட்டி வதைத்தது.
அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த வில்வாவுக்கு தன் பிரச்சனையை நினைத்து கவலையாய் இருந்தது. முன்னால் இருப்பவளை பார்த்தான்.
இவள் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். வேறு யாராவது ஒருத்தி நமக்கு கிடைக்க மாட்டாளா என்று யோசித்தான்.
காலையில்தான் அதரா கண் விழித்தாள்.
"சரி நான் கிளம்புறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு.." என்று சொல்லிவிட்டு வில்வா அந்த வீட்டில் இருந்து கிளம்பினான்.
அதரா அடுத்த அரை மணி நேரத்திற்கு அங்கேயே அமர்ந்து இருந்தாள். குடிக்க தண்ணீர் கூட இல்லை. எங்காவது போய் சேகரித்தாக வேண்டும்.
அந்த வீட்டுக்கு கதவுமில்லை. டிராகன்கள் எல்லாவற்றையும் வாசம் பிடிக்கும். இந்த வீட்டுக்குள் நாம் இருந்தாலும் டிராகன் வந்துவிடும்.
வில்வா கூட இப்போது கிளம்பினானே. அதுபோல் நாமும் கிளம்பலாம். கொலைகார கூட்டமும் டிராகனும் நம்மை கண்டுபிடிக்கும் முன்னால் பாதுகாப்பான ஒரு இடத்தை கண்டுபிடித்து விடலாம் என்ற எண்ணத்தோடு எழுந்து நின்றாள்.
தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினாள்.
அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். கொஞ்சம் உயரமான இடமாய் இருந்தது அவள் நின்றிருந்த இடம். அங்கிருந்து பார்க்கும்போது தூரத்தில் சோலை ஒன்று தெரிந்தது.
அங்கே போய்விட்டாள் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. நடுவில் இருந்த கட்டிட இடிப்பாடுகளை தாண்டி போய்விட்டால் போதும். மாலை நான்கு மணி வரையிலும் உயிரோடு தப்பிவிட்டால் போதும். அதன் பிறகு ஏதாவது ஒரு சுதந்திர கூட்டத்தோடு இணைந்து நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.
கட்டிட இடிப்பாடுகளில் புகுந்து நடந்தாள். ஆங்காங்கே புற்களும் புதர்களும் வளர்ந்து கிடந்தன.
இந்த டிராகன்கள் ஏன் கொலைகாரர்களையும் கொள்ளைகாரர்களையும் கொல்வதில்லை என்று தன்னிடமே சந்தேகம் கேட்டாள்.
அவள் சந்தேகம் கொண்ட அதே நேரத்தில் அருகில் என்னவோ விழுந்து உடையும் சத்தம் கேட்டது. இவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள். நடுவில் ஒரு பாதை போய் கொண்டிருந்தது. பாதையின் அந்தப் புறம் ஒரு பாழடைந்த வீடு இருந்தது. அந்த வீட்டின் வெளியே பச்சை போர்வை போர்த்தப்பட்டது போல் கொடிகள் ஓடிக்கொண்டிருந்தன. வீட்டின் வாசல் போல் இருந்த இடத்தில் அரையாள் உயரத்திற்கு புற்கள் வளர்ந்து கிடந்தன.
அங்கே அந்த வீட்டின் வெளியே புற்களின் இடையே இருந்தது ஒரு கொலைகார கூட்டம்.
சிலர் கத்திகளை சுழட்டிக் கொண்டிருந்தார்கள்.
"ஏதாவது ஒரு சுதந்திர கூட்டம் கிடைச்சா நல்லா இருக்கும். வேட்டையாடி டேஸ்ட் பார்க்கலாம்.." என்று ஒருவன் சொன்னான்.
அதரா பயத்தோடு கட்டிட இடுப்பாடுகளின் பின்னால் ஒளிந்தாள். அந்தக் கூட்டம் எங்கோ கிளம்பி கொண்டு இருந்தது. அந்த கூட்டம் கண்ணை விட்டு மறைந்த பிறகு இங்கிருந்து மீண்டும் நடக்கலாம் என்று முடிவெடுத்து அங்கேயே இருந்தாள். கட்டிட இடிப்பாடுகளில் இருந்து விஷ ஜந்துகள் எதுவும் வந்து தன்னை தீண்டி விடக்கூடாது என்று மனதோடு வேண்டிக் கொண்டாள்.
அந்த கூட்டம் இவள் இருந்த திசை நோக்கிதான் வந்தது.
'ஐயோ! நான் இன்னைக்கு சாகப் போறேன்.' என்று பயந்தாள் அதரா.
அதே நேரத்தில் அவள் மீது நிழல் விழுந்தது. அண்ணாந்து பார்த்தாள். நீல நிறத்தில் ராட்சத டிராகன் ஒன்று தலைக்கு மேல் இருந்தது.
இவள் அதிர்ச்சியில் வாயை பெரிதாக திறந்தாள்.
அந்த டிராகன் கொஞ்சம் கீழே இறங்கி வந்தது. வாயை திறந்து நெருப்பை கக்கியது. அந்த கொலைகார கூட்டத்தை கண்ணிமைக்கும் நொடியில் தீய்த்து விட்டது.
அதிர்ச்சியில் அதராவால் கத்த கூட முடியவில்லை.
அந்த பச்சை புல்வெளி இப்போது கருகிப் போய்விட்டது. கருகிய உடல்களும் தரையோடு சரிந்து விழுந்தன.
அந்த வீட்டின் முன்னால் படர்ந்திருந்த கொடிகள் கூட இந்த டிராகனின் நெருப்பு மூச்சால் கருகி விட்டன.
டிராகன் நம்மை பார்க்க கூடாது என்று கண்களை மூடி வேண்டிக் கொண்டு இருந்தாள் அதரா.
அந்த ட்ராகன் அவளின் தலைக்கு மேல்தான் இருந்தது.
கண்களை மூடி இருந்தவள் தன்னை எதுவோ பிடித்து தூக்கவும் கண்களை திறந்தான். அந்த டிராகன்தான் தனது பெரிய கால்களால் இவளை தூக்கி இருந்தது. அவளை தூக்கியப்படியே அங்கிருந்து பறந்து சென்றது.
தொடரும்.