Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] பனிமலர் வீடு 4 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!
  • Thread Author
"இந்த விசயம் ரோபோட்களுக்கு தெரிஞ்சா நாம பிரிக்கப்பட்டு விடுவோம்.." என்றாள் ரசிகா.

திரையில் தெரிந்த மனித இயந்திரங்களான ரசிகாவையும் செந்திலகனையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் நிலவில் இருந்த இயந்திர மனிதர்கள்.

"இது உண்மையா.? ஆனால் எப்படி.?" குழம்பினார்கள் அவர்கள்.

மருத்துவரிடமிருந்து தகவல் வந்த அடுத்த நொடியிலிருந்து இவர்களை கண்காணிக்கிறார்கள். செந்திலகனுக்கு வியர்வை வந்ததே பெரும் அதிர்ச்சி. ரசிகாவின் கண்ணீரும், அவர்களின் பயமும் இவர்களை சில நொடிகள் செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தன.

"அழுகை, பயம், வியர்வையா.?" ஆச்சரியத்தோடு கேட்டது ஏந்த்ரி. இந்த அதிர்ச்சி ஆச்சரியமெல்லாம் ஏந்த்ரிக்குள் பதிவு செய்து வைக்கப்பட்ட உணர்வுகள்.

"காதலும் இருக்கென்று நினைக்கிறேன்.." என்ற தியேந்த்ரி செந்திலகன் ரசிகாவின் கண்ணீரை துடைத்து விடும் இடத்தில் கொண்டுச் சென்று வீடியோவை நிறுத்தியது.

"ஒருவரின் கண்ணீரை மற்றொருவர் துடைத்து விட்டால் அது காதல்.." என்றது.

"அது அன்பு.. கருணை என்று சொல்வார்கள்.." என்றது மற்றொரு இயந்திர மனிதன்.

"ஏதோ ஒன்று.. கூட்டுங்கள் புது கூட்டத்தை. நமக்கு முன்னால் பல வேலைகள் இருக்கின்றன.." என்று கட்டளையிட்டது ஏந்த்ரி.

***

"நமக்கு ஏன் திடீர் விடுமுறை தந்துள்ளார்கள்.?" சந்தேகத்தோடு கேட்டான் மைன்டி8.

"எனக்கும் தெரியல. இனி நான் சமைக்க வேண்டாம். தினமும் நடைபயிற்சி செல்ல வேண்டாம். சில நாட்களுக்காவது உடைகள் உடுத்த வேண்டாம்.." என்றுச் சொல்லி மகிழ்ந்தாள் மியானி7.

"நானும் பள்ளிக்கு செல்ல வேண்டாம்.." என்றபடி இருக்கையில் சாய்ந்து படுத்தாள் சாய்னியா2.

இவர்கள் ஓய்வை முழுமையாக கொண்டாட இருந்த நேரத்தில் அவர்களின் வீட்டு இயந்திர மனிதன் இவர்களிடம் வந்தது.

"நீங்கள் இங்கே ஓய்வெடுக்க முடியாது. நீங்கள் உங்களின் பண்ணை வீடுகளுக்கு சென்று தாராளமாக ஓய்வெடுக்கலாம்.." என்றது.

மைன்டி8 வருத்தமானான்.

"ரொம்ப கடினமாக இருக்கிறது.. அங்கே போய் நாங்கள் என்ன செய்வோம்.? அந்த இடத்தின் வடிக்கட்டப்படாத காற்றும், சூரிய வெளிச்சம் உலாவும் இடமும் எங்களின் சருமத்தை பாதிக்கும்.." என்றான்.

"ஆனால் உங்களுக்கு வேறு வழி இல்லை.." என்றது அந்த இயந்திர மனிதன்.

"அந்த இடத்து உணவை நாங்கள் உண்ண வேண்டும் என்று புது கட்டளை போட போகிறீர்களா.?" சந்தேகமாக கேட்டாள் மியானி7.

"இல்லை.. உங்கள் பண்ணை வீட்டின் பணியாட்கள் மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி மாறிவிட்டால் அவர்களை கொண்டே உண்மையான மனிதர்களை உருவாக்கி விடுவார்கள் இயந்திர மனிதர்கள். அந்த பெண்ணால் ஒரு குழந்தையை சுமக்க முடிந்து அதை அவள் பெற்றும் எடுத்து விட்டால் பிறகு எங்களின் தேடல் அனைத்தும் நிறைவேறிவிடும். இரு மனிதர்கள் நான்கு மனிதர்களாகவும், நான்கு மனிதர்கள் எட்டாகவும், அந்த எட்டு பதினாறாகவும் உருவாகும். பிறகு உங்களை போன்ற கண்ணாடி பிரதிபலிப்பு மனிதர்கள் தேவையில்லை. அந்த இருவரும் மனிதர்களாக மாறிவிட்டால் பிறகு இந்த செவ்வாயில் உள்ள அனைத்து மனிதர்களையும் அழித்து விட திட்டமிட்டு இருக்கிறார்கள் ரோபோட்க்கள். பல வருடங்களாக உங்களை எனது குழந்தைகள் போல நினைத்து பாதுகாத்து வருகிறேன் நான். நீங்கள் அழிவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் உங்களுக்கு மட்டும் இந்த ரகசியத்தை செல்கிறேன்.. விடுமுறைக்கு சென்ற இடத்தில் அவர்களை நீங்கள் அழிக்காவிட்டால் அதன்பிறகு நீங்கள் அழிவீர்கள்.." என்று தகவலை சொன்னது.

மைன்டி8ம் மற்ற இருவரும் அதிர்ந்து போனார்கள். இப்படி ஒரு விசயம் நடக்க வாய்ப்பே இல்லை என்று மியானி7க்கு தெரியும். இருந்தும் அப்படி ஒன்று நடந்துவிட்டால் என்ன செய்வது.?

அடுத்த நாளே அவர்கள் மூவரும் தங்களின் அதிவேக ஜெட்டில் ஏறினார்கள். பூமிக்கு செல்ல வேண்டும் என்று ஜெட்டிற்கு கமாண்ட் தந்துவிட்டு வந்து தனது இருக்கையில் அமர்ந்தான் மைன்டி8.

"இது எப்படி சாத்தியம்.?" சந்தேகமாக கேட்டான் மைன்டி8.

"தெரியல. ஆனால் அவர்கள் மனிதர்களாக மாறவே முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை இல்லை.." என்றாள் மியானி7.

மியானி7ம் ஒரு குழந்தை பெற்றுள்ளாள். ஆனால் அவள் கரு சுமந்தது அவ்வளவு சுலபமாய் நடந்து விடவில்லை. அவளின் கருமுட்டையையும், மைன்டி8ன் உயிரணுவையும் டெஸ்ட் டியூப்பில் இணைத்து கருவை உருவாக்கினார்கள். அதன் பிறகே இவளின் கருப்பையில் கரு வைக்கப்பட்டது. அவளால் அந்த கருவை சுமக்க முடியவில்லை என்று நான்காம் மாதத்திலேயே அவளின் வயிற்றில் ஆபரேசன் செய்து கருவை வெளியே எடுத்து விட்டார்கள். மீதி ஆறு மாதங்களும் அந்த கரு செயற்கை கருவறையில் வைத்துதான் வளர்க்கப்பட்டது. சாய்னியா2 குழந்தையாக உருவான பிறகும் கூட நான்கு வருடங்கள் அவளை பார்க்க செல்லவில்லை மியானி7.

குழந்தையை தாயும் தந்தையும் வளர்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்டார்கள் இயந்திர மனிதர்கள். ஆனால் மியானி7க்கு விருப்பம் இல்லை.

குழந்தை என்பது விசித்திர பிராணி என்று அவளுக்கு நினைப்பு. குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தால் பத்திரமாக வளர்க்கவும் பாதுகாக்கவும் பல இயந்திரங்கள் உண்டு. ஆனால் அந்த குழந்தை அழுதுவிட்டால் என்ன செய்வது என்று பயந்தாள்.

குழந்தையின் அழுகை சத்தம் அவளுக்கு துளியும் பிடிக்காது. குழந்தையின் நாப்கினை மாற்ற இயந்திரங்கள் இருந்தாலும அந்த நாப்கின்னை மாற்றுகையில் குழந்தையின் உடல் கழிவில் இருந்து புறப்படும் நாற்றம் அவளை மயக்க செய்துவிடும் என்று பயந்தாள். நகத்தின் கணுவிலும் கூட சிறு அழுக்கு சேர கூடாது என விரும்புபவள் அவள்.

இவர்களிடம் எதையாவது சொல்ல வேண்டுமென்றால் கெஞ்சிக் கேட்டுதான் சொல்வார்கள் இயந்திர மனிதர்கள். ஏனெனில் அந்த அளவிற்கு மனிதர்கள் தற்கொலை என்ற ஒன்றை சொல்லி இயந்திர மனிதர்களை பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

**

பூமியில் இருந்த மைன்டி8யின் பண்ணை வீட்டின் மாடியில் தரை இறங்கியது ஜெட். மைன்டி8யும் அவனது குடும்பமும் ஜெட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

தரையில் பார்க்கும் இடமெங்கும் பச்சையாக இருந்தது. வானம் நீல நிறத்தில் இருந்தது.

முன் அறிவிப்பு செய்யாமல் வந்து விட்டவர்கள் படிகளின் கதவில் கைரேகைகளை பதித்து வீட்டிற்குள் இறங்கினார்கள்.

மாடியில் நிற்க கூட பிடிக்கவில்லை மியானி7க்கு. வீட்டை சுற்றிலும் பச்சையாக இருந்த செடிகளை பார்க்கும்போதே குமட்டியது அவளுக்கு. பச்சை வண்ணங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. சிவந்த கிரகமான செவ்வாயில் விளைந்த கீரைகள் கூட சிவந்த நிறத்தில் அழகியலை உடையவை. அதனாலேயே அவளுக்கு இந்த பச்சையை பிடிக்காமல் போய்விட்டது.

இவர்கள் மூவரும் வீட்டின் கூடத்திற்கு வந்தபோது செந்திலகனும் ரசிகாவும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வந்து நிற்பதை கூட கவனிக்காமல் அந்த புத்தகங்களில் மூழ்கிப் போய் இருந்தார்கள் இருவரும். புறநானூறு என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை கையில் வைத்திருந்தான் செந்திலகன்.

புத்தக தலைப்பை கண்டதும் பயந்தே போய் விட்டான் மைன்டி8. அழிந்து போன சொற்றொடர்கள் மட்டுமே அந்த புத்தகத்தில் இருக்குமென்று அவனின் பள்ளி வகுப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

நண்பர்களோடு இணைந்து விளையாட்டு போல அந்த புத்தகத்தை இவனும் ஒருநாள் பிரித்து பார்த்திருக்கிறான். ஒரு வார்த்தை கூட புரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் இணைய பக்கத்தின் சேமிப்புகளில் கூட இல்லை.

செந்திலகன் படித்த புத்தகமே அவன் மாறுப்பட்டு விட்டான் என்பதை காட்டியது.

"அப்படி என்ன திமிர் உங்களுக்கு.?" மியானி7னின் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.

"வணக்கம் மேடம்.." என்ற ரசிகா அவரசமாக மியானி7னின் அருகே ஓடினாள்.

"அந்த புத்தகத்தை கொண்டுச் சென்று எங்காவது மறைத்து வைத்துவிட்டு வா.. ஆகாத வேலைகள் மட்டும்தான் செய்வீர்களா.?" என்று திட்டினாள் அவள்.

தொடரும் நட்புகளே. எபி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே

#crazy writer story
# tamil novels
# science fiction
# love story
 
அடப்பாவிங்களா புறநானூறு அழிந்த புத்தகமா🙄🙄🙄🙄எப்படிப்பட்ட புத்தகம் அது....நான் படிச்சதில்லை அது வேற விஷயம்😅😅😅😅😅ஆனால் இலக்கண இலக்கியத்தை விரும்புவர்களின் விருப்பமான சிறப்பான பெருமை கொண்டதைப் படிச்சும் புரியலைனா நீ எல்லாம் டிமாண்டி காலனியில சாக வேண்டியவன் டா😡😡😡😡😡இவங்களைக் கொல்ல வந்திருக்கீங்க....இவ வேற கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சையை விட சிகப்பு நல்லதாம்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️இவளை பசுமையான வயலுக்கு நடுவுல தான் வாழனும்னு சொல்லனும் ஏந்த்ரி😌😌😌😌பிளான் பண்ணி இதுங்களை இங்க அனுப்பி ஆராய்ச்சி பண்ணுதுங்களோ🤔🤔🤔🤔
 
புறநானூறு அழிந்த புத்தகமா என்னடா இப்பிடி ஆகிட்டிங்க.மனிதன் சோம்பேறி ஆகிஆகியே கடைசில இப்பிடி மாறிட்டான். ஒருத்திக்கு குழந்தைய பெத்துக்கவும் தெரியாது வளக்கவும் தெரியாது பிடிக்காதுங்கிற. Future la இப்டிதான் இருக்குமோ உலகம். நினைச்சாவே பயமா இருக்கு
 
Enaku therinji antha 3 perayum senthilagan and rasiga kitta epdi human a irukanum nu kathukarathuku than anupi irupanga... I guess akka....... Super sis eagerly waiting gor next episode 💝💝😍😍😍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
 
நன்றி சிஸ்.
 
நன்றி சிஸ்
 
Enaku therinji antha 3 perayum senthilagan and rasiga kitta epdi human a irukanum nu kathukarathuku than anupi irupanga... I guess akka....... Super sis eagerly waiting gor next episode 💝💝😍😍😍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

நன்றி சிஸ் 💝
 
"இந்த விசயம் ரோபோட்களுக்கு தெரிஞ்சா நாம பிரிக்கப்பட்டு விடுவோம்.." என்றாள் ரசிகா.

திரையில் தெரிந்த மனித இயந்திரங்களான ரசிகாவையும் செந்திலகனையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் நிலவில் இருந்த இயந்திர மனிதர்கள்.

"இது உண்மையா.? ஆனால் எப்படி.?" குழம்பினார்கள் அவர்கள்.

மருத்துவரிடமிருந்து தகவல் வந்த அடுத்த நொடியிலிருந்து இவர்களை கண்காணிக்கிறார்கள். செந்திலகனுக்கு வியர்வை வந்ததே பெரும் அதிர்ச்சி. ரசிகாவின் கண்ணீரும், அவர்களின் பயமும் இவர்களை சில நொடிகள் செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தன.

"அழுகை, பயம், வியர்வையா.?" ஆச்சரியத்தோடு கேட்டது ஏந்த்ரி. இந்த அதிர்ச்சி ஆச்சரியமெல்லாம் ஏந்த்ரிக்குள் பதிவு செய்து வைக்கப்பட்ட உணர்வுகள்.

"காதலும் இருக்கென்று நினைக்கிறேன்.." என்ற தியேந்த்ரி செந்திலகன் ரசிகாவின் கண்ணீரை துடைத்து விடும் இடத்தில் கொண்டுச் சென்று வீடியோவை நிறுத்தியது.

"ஒருவரின் கண்ணீரை மற்றொருவர் துடைத்து விட்டால் அது காதல்.." என்றது.

"அது அன்பு.. கருணை என்று சொல்வார்கள்.." என்றது மற்றொரு இயந்திர மனிதன்.

"ஏதோ ஒன்று.. கூட்டுங்கள் புது கூட்டத்தை. நமக்கு முன்னால் பல வேலைகள் இருக்கின்றன.." என்று கட்டளையிட்டது ஏந்த்ரி.

***

"நமக்கு ஏன் திடீர் விடுமுறை தந்துள்ளார்கள்.?" சந்தேகத்தோடு கேட்டான் மைன்டி8.

"எனக்கும் தெரியல. இனி நான் சமைக்க வேண்டாம். தினமும் நடைபயிற்சி செல்ல வேண்டாம். சில நாட்களுக்காவது உடைகள் உடுத்த வேண்டாம்.." என்றுச் சொல்லி மகிழ்ந்தாள் மியானி7.

"நானும் பள்ளிக்கு செல்ல வேண்டாம்.." என்றபடி இருக்கையில் சாய்ந்து படுத்தாள் சாய்னியா2.

இவர்கள் ஓய்வை முழுமையாக கொண்டாட இருந்த நேரத்தில் அவர்களின் வீட்டு இயந்திர மனிதன் இவர்களிடம் வந்தது.

"நீங்கள் இங்கே ஓய்வெடுக்க முடியாது. நீங்கள் உங்களின் பண்ணை வீடுகளுக்கு சென்று தாராளமாக ஓய்வெடுக்கலாம்.." என்றது.

மைன்டி8 வருத்தமானான்.

"ரொம்ப கடினமாக இருக்கிறது.. அங்கே போய் நாங்கள் என்ன செய்வோம்.? அந்த இடத்தின் வடிக்கட்டப்படாத காற்றும், சூரிய வெளிச்சம் உலாவும் இடமும் எங்களின் சருமத்தை பாதிக்கும்.." என்றான்.

"ஆனால் உங்களுக்கு வேறு வழி இல்லை.." என்றது அந்த இயந்திர மனிதன்.

"அந்த இடத்து உணவை நாங்கள் உண்ண வேண்டும் என்று புது கட்டளை போட போகிறீர்களா.?" சந்தேகமாக கேட்டாள் மியானி7.

"இல்லை.. உங்கள் பண்ணை வீட்டின் பணியாட்கள் மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி மாறிவிட்டால் அவர்களை கொண்டே உண்மையான மனிதர்களை உருவாக்கி விடுவார்கள் இயந்திர மனிதர்கள். அந்த பெண்ணால் ஒரு குழந்தையை சுமக்க முடிந்து அதை அவள் பெற்றும் எடுத்து விட்டால் பிறகு எங்களின் தேடல் அனைத்தும் நிறைவேறிவிடும். இரு மனிதர்கள் நான்கு மனிதர்களாகவும், நான்கு மனிதர்கள் எட்டாகவும், அந்த எட்டு பதினாறாகவும் உருவாகும். பிறகு உங்களை போன்ற கண்ணாடி பிரதிபலிப்பு மனிதர்கள் தேவையில்லை. அந்த இருவரும் மனிதர்களாக மாறிவிட்டால் பிறகு இந்த செவ்வாயில் உள்ள அனைத்து மனிதர்களையும் அழித்து விட திட்டமிட்டு இருக்கிறார்கள் ரோபோட்க்கள். பல வருடங்களாக உங்களை எனது குழந்தைகள் போல நினைத்து பாதுகாத்து வருகிறேன் நான். நீங்கள் அழிவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் உங்களுக்கு மட்டும் இந்த ரகசியத்தை செல்கிறேன்.. விடுமுறைக்கு சென்ற இடத்தில் அவர்களை நீங்கள் அழிக்காவிட்டால் அதன்பிறகு நீங்கள் அழிவீர்கள்.." என்று தகவலை சொன்னது.

மைன்டி8ம் மற்ற இருவரும் அதிர்ந்து போனார்கள். இப்படி ஒரு விசயம் நடக்க வாய்ப்பே இல்லை என்று மியானி7க்கு தெரியும். இருந்தும் அப்படி ஒன்று நடந்துவிட்டால் என்ன செய்வது.?

அடுத்த நாளே அவர்கள் மூவரும் தங்களின் அதிவேக ஜெட்டில் ஏறினார்கள். பூமிக்கு செல்ல வேண்டும் என்று ஜெட்டிற்கு கமாண்ட் தந்துவிட்டு வந்து தனது இருக்கையில் அமர்ந்தான் மைன்டி8.

"இது எப்படி சாத்தியம்.?" சந்தேகமாக கேட்டான் மைன்டி8.

"தெரியல. ஆனால் அவர்கள் மனிதர்களாக மாறவே முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை இல்லை.." என்றாள் மியானி7.

மியானி7ம் ஒரு குழந்தை பெற்றுள்ளாள். ஆனால் அவள் கரு சுமந்தது அவ்வளவு சுலபமாய் நடந்து விடவில்லை. அவளின் கருமுட்டையையும், மைன்டி8ன் உயிரணுவையும் டெஸ்ட் டியூப்பில் இணைத்து கருவை உருவாக்கினார்கள். அதன் பிறகே இவளின் கருப்பையில் கரு வைக்கப்பட்டது. அவளால் அந்த கருவை சுமக்க முடியவில்லை என்று நான்காம் மாதத்திலேயே அவளின் வயிற்றில் ஆபரேசன் செய்து கருவை வெளியே எடுத்து விட்டார்கள். மீதி ஆறு மாதங்களும் அந்த கரு செயற்கை கருவறையில் வைத்துதான் வளர்க்கப்பட்டது. சாய்னியா2 குழந்தையாக உருவான பிறகும் கூட நான்கு வருடங்கள் அவளை பார்க்க செல்லவில்லை மியானி7.

குழந்தையை தாயும் தந்தையும் வளர்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்டார்கள் இயந்திர மனிதர்கள். ஆனால் மியானி7க்கு விருப்பம் இல்லை.

குழந்தை என்பது விசித்திர பிராணி என்று அவளுக்கு நினைப்பு. குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தால் பத்திரமாக வளர்க்கவும் பாதுகாக்கவும் பல இயந்திரங்கள் உண்டு. ஆனால் அந்த குழந்தை அழுதுவிட்டால் என்ன செய்வது என்று பயந்தாள்.

குழந்தையின் அழுகை சத்தம் அவளுக்கு துளியும் பிடிக்காது. குழந்தையின் நாப்கினை மாற்ற இயந்திரங்கள் இருந்தாலும அந்த நாப்கின்னை மாற்றுகையில் குழந்தையின் உடல் கழிவில் இருந்து புறப்படும் நாற்றம் அவளை மயக்க செய்துவிடும் என்று பயந்தாள். நகத்தின் கணுவிலும் கூட சிறு அழுக்கு சேர கூடாது என விரும்புபவள் அவள்.

இவர்களிடம் எதையாவது சொல்ல வேண்டுமென்றால் கெஞ்சிக் கேட்டுதான் சொல்வார்கள் இயந்திர மனிதர்கள். ஏனெனில் அந்த அளவிற்கு மனிதர்கள் தற்கொலை என்ற ஒன்றை சொல்லி இயந்திர மனிதர்களை பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

**

பூமியில் இருந்த மைன்டி8யின் பண்ணை வீட்டின் மாடியில் தரை இறங்கியது ஜெட். மைன்டி8யும் அவனது குடும்பமும் ஜெட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

தரையில் பார்க்கும் இடமெங்கும் பச்சையாக இருந்தது. வானம் நீல நிறத்தில் இருந்தது.

முன் அறிவிப்பு செய்யாமல் வந்து விட்டவர்கள் படிகளின் கதவில் கைரேகைகளை பதித்து வீட்டிற்குள் இறங்கினார்கள்.

மாடியில் நிற்க கூட பிடிக்கவில்லை மியானி7க்கு. வீட்டை சுற்றிலும் பச்சையாக இருந்த செடிகளை பார்க்கும்போதே குமட்டியது அவளுக்கு. பச்சை வண்ணங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. சிவந்த கிரகமான செவ்வாயில் விளைந்த கீரைகள் கூட சிவந்த நிறத்தில் அழகியலை உடையவை. அதனாலேயே அவளுக்கு இந்த பச்சையை பிடிக்காமல் போய்விட்டது.

இவர்கள் மூவரும் வீட்டின் கூடத்திற்கு வந்தபோது செந்திலகனும் ரசிகாவும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வந்து நிற்பதை கூட கவனிக்காமல் அந்த புத்தகங்களில் மூழ்கிப் போய் இருந்தார்கள் இருவரும். புறநானூறு என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை கையில் வைத்திருந்தான் செந்திலகன்.

புத்தக தலைப்பை கண்டதும் பயந்தே போய் விட்டான் மைன்டி8. அழிந்து போன சொற்றொடர்கள் மட்டுமே அந்த புத்தகத்தில் இருக்குமென்று அவனின் பள்ளி வகுப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

நண்பர்களோடு இணைந்து விளையாட்டு போல அந்த புத்தகத்தை இவனும் ஒருநாள் பிரித்து பார்த்திருக்கிறான். ஒரு வார்த்தை கூட புரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் இணைய பக்கத்தின் சேமிப்புகளில் கூட இல்லை.

செந்திலகன் படித்த புத்தகமே அவன் மாறுப்பட்டு விட்டான் என்பதை காட்டியது.

"அப்படி என்ன திமிர் உங்களுக்கு.?" மியானி7னின் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.

"வணக்கம் மேடம்.." என்ற ரசிகா அவரசமாக மியானி7னின் அருகே ஓடினாள்.

"அந்த புத்தகத்தை கொண்டுச் சென்று எங்காவது மறைத்து வைத்துவிட்டு வா.. ஆகாத வேலைகள் மட்டும்தான் செய்வீர்களா.?" என்று திட்டினாள் அவள்.

தொடரும் நட்புகளே. எபி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே

#crazy writer story
# tamil novels
# science fiction
# love story
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
😀😀😀😀😀😀🤣
 
Pirkalathula ipdi than aagumo... Really semma superb sis.. ungalala matum than ipdi lam think pana mudiyum...

# love stories
 
Back
Top