sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 777
- Thread Author
- #1
54
நீலவேணி கல்லூரியின் வாசலில் நின்றிருந்தாள்.
இப்போதுதான் கல்லூரி முடிந்திருந்தது. கல்லூரி முடியும் முன்பே தினம் வந்து காத்திருக்கும் மித்ரன் இன்று வந்திருக்கவில்லை.
ஐந்து நிமிடங்கள் காத்திருந்து விட்டு அவனுக்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்தாள் இவள்.
ஐந்து நிமிடங்கள் முடியும் முன்பே மித்ரனின் நண்பனிடமிருந்து இவளுக்கு அழைப்பு வந்தது.
அழைப்பேற்றவளிடம் "சிஸ்டர் நீங்க உடனடியா டி.எம் ஹாஸ்பிடல் வாங்க. மித்ரனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சி. டாக்டர் உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்றாரு.." என்றான்.
நீலவேணியின் கை கால்கள் உதறியது.
கைபேசியை பேக்கில் திணித்துக் கொண்டு சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். டிஎம் மருத்துவமனைக்கு போக சொன்னாள்.
மருத்துவமனை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. நீலவேணி கண்களில் வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்து கொண்டு இருந்தாள்.
அதே நேரத்தில் எதிர் திசையிலிருந்து வந்தது மதுரனின் கார்.
தந்தையிடம் வேலையை விட்டு செல்வதாக சொல்லி விட்டு வந்தவன் மனைவியை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டு கொண்டிருந்தான்.
இன்று வீட்டிலிருந்து தனியே சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான் அவன்.
"எதற்காக முகம் இப்படி இருக்கிறது.?" என்று கேட்ட மனைவியிடம் பதில் சொல்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் எதிரில் வந்த ஆட்டோவில் அழுதபடி சென்ற நீலவேணியை கண்டு விட்டு குழம்பினான்.
மித்ராவும் அவளை கண்டாள். உடனே தனது கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தாள்.
மித்ராவிடமிருந்து அழைப்பு வந்ததும் வேணிக்கு மேலும் பயம் கூடிவிட்டது. ஒருவேளை கணவனுக்கு மிகவும் கவலைக்கிடம் போல. அதனால்தான் தங்கைக்கும் சொல்லிவிட்டார்கள் என்று நினைத்து விம்மியப்படியே அலைபேசியை காதில் வைத்தாள்.
"அவருக்கு ஒன்னும் ஆகலதானே.?" என்று கேட்டாள்.
மித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. "யாருக்கு என்ன ஆச்சி.?" என்று விசாரித்தாள்.
நீலவேணி குலுங்கி அழுதாள்.
"மித்ரனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு.." என்று சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.
அவள் சொன்னதை கேட்டு மித்ராவுக்கும் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
"எந்த ஹாஸ்பிட்டல்.?" பயத்தோடு கேட்டாள்.
"டி.எம் ஹாஸ்பிட்டல்.." என்று இவள் சொன்னதும் "நான் உடனே வரேன்.." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
தன் கணவனின் புறம் பார்த்தவள் "என் அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். டி.எம் ஹாஸ்பிடல் போங்க.." என்றாள்.
மதுரனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
மித்ரா 'ஹாஸ்பிடல் போங்க' என்று சொல்லும்போதே அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளின் அழுகையை கண்டவன் உடனடியாக காரை திரும்பினான். மருத்துவமனையை நோக்கி காரை ஓட்டினான்.
"அழாத உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது.." என்று ஆறுதல் சொன்னான்.
ஆனாலும் மித்ரா விம்மிக் கொண்டேதான் வந்தாள்.
மருத்துவமனையின் முன்பு ஆட்டோ நின்றதும் கீழே இறங்கிய நீலவேணி அருகில் வந்து நின்ற காரையும் அதிலிருந்து இறங்கிய மித்ராவையும் கண்டாள்.
பெண்கள் இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்குள் ஓடினார்கள்.
மதுரனும் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே நடந்தான்.
மூன்றடுக்கு மருத்துவமனை அது.
வரவேற்பு அறை பெண்மணியிடம் ஓடிய மித்ரா "பேஷண்ட் மித்ரனை பார்க்கணும். அவங்க இப்ப எங்கே இருக்காங்க.?" என்று விசாரித்தாள்.
வரவேற்பறை பெண்மணி கம்ப்யூட்டரில் தட்டி பார்த்து விட்டு நிமிர்ந்தாள்.
"ஐ.சி.யூ வார்டில் செகண்ட் ரூம்.." என்று பதில் சொன்னாள்.
பதறிய இருவரும் மாடியை நோக்கி ஓடினார்கள். மதுரனும் அவர்களை பின் தொடர்ந்தான்.
தீவிர சிகிச்சை பிரிவின் முன்னால் வந்து நின்றார்கள் பெண்கள் இருவரும்.
அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே இருந்து வந்த மருத்துவர் ஒருவர் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்ற இரண்டு பெண்களையும் பார்த்தார்.
"யார் நீங்க.?" என்று விசாரித்தார்.
"பேஷண்ட் மித்ரனுக்கு என்ன ஆச்சி.?" கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்டாள் நீலவேணி.
"ஓ நீங்கதானா அது.?" என்றபடி தன் கையில் இருந்து பைலை புரட்டி விட்டு நிமிர்ந்தவர் "இங்க பாருங்க.. கண்டிஷன் ரொம்ப சீரியஸா இருக்கு.. ரெண்டு கிட்னியும் முழுசா ஃபெயிலியர் ஆகி இருக்கு. அவங்க சிஸ்டரோட கிட்னி மட்டும்தான் இவருக்கு ஒத்துப் போகுது. இன்னும் இரண்டு நாள்ல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யலன்னா மித்ரனோட உயிரை காப்பாத்த முடியாது. சீக்கிரமா ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
நீலவேணியும் மித்ராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"அவ்வளவு சீரியஸா போயிடுச்சா.?" என்று கேட்கும் போதே நீலவேணியின் கண்களில் இருந்து மீண்டும் ஆறாக கொட்டியது கண்ணீர்.
மித்ராவுக்கு குழப்பமாக இருந்தது. அண்ணனுக்கு விபத்து என்று சொன்னதுமே பயமும் குழப்பமும் அவளை சூழ்ந்து விட்டது. இப்போது மிகவும் சீரியஸான நிலைமை என்ற விஷயம் காதுகளுக்கு வந்து சேர்ந்ததும் அவளின் மிச்ச மீதி அறிவும் வேறு எங்கோ ஓடி விட்டது.
"என்னால மட்டும்தான் என் அண்ணனை காப்பாத்த முடியுமா.?" காற்றோடு கேட்டாள்.
நீலவேணி விம்மியப்படியே மித்ராவின் கைகளை பிடித்தாள். "நீங்க ஹெல்ப் பண்ணுவிங்கதானே!?" என்று கேட்டாள்.
நீலவேணியின் அழுத கண்களை பார்த்தாள் மித்ரா.
"முடியாதுன்னு சொல்லிடாதிங்க. எப்படியாவது அவரை காப்பாத்தி குடுங்க.." விம்மியபடி கேட்டாள்.
மித்ரா வாய் திறக்கும் முன்பு அவளின் கையை பற்றிய மதுரன் "வேற யார்கிட்டயாவது போய் பிச்சை எடு.." என்று சொன்னான் தங்கையிடம்.
நீலவேணி அதிர்ச்சியோடு தன் அண்ணனின் முகத்தை பார்த்தாள்.
"உன் புருஷனுக்கு என் பொண்டாட்டி கிட்னி தர மாட்டா.." என்று சொன்னவன் மித்ராவின் முகம் பார்த்தான்.
"இவளோட புருஷனுக்கு நீ உதவி செய்யக்கூடாது.." என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.
"அது என் அண்ணன்.." மித்ரா நடந்து கொண்டே சொன்னாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் மட்டும்தான் அண்ணன் ஆட்டுக்குட்டி எல்லாம். இப்ப நான் மட்டும்தான் உனக்கு. உன் அண்ணனுக்கு நீ ஹெல்ப் பண்றதா இருந்தா நான் வேணாம்ன்னு சொல்லியிருக்க மாட்டேன். ஆனா அந்த சனியனோட புருஷனுக்கு என் பொண்டாட்டி உதவி செய்யக்கூடாது. அவ்வளவுதான்.." என்று சொன்னவன் மனைவியை இழுத்துக் கொண்டு காரின் அருகில் சென்றான்.
அண்ணன் மித்ராவை இழுத்துக் கொண்டு சென்றதும் உறைந்து நின்று விட்டாள் நீலவேணி. அவனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை இவள்.
அதன் பிறகுதான் தான் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவிற்கு வந்தன. அவன் அதை நினைவில் வைத்து இப்போது பழி வாங்குகிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனிடம் கெஞ்ச கூடாது என்று சொல்லியது தன்மானம். ஆனால் கணவனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் நினைவிற்கு வந்து சேர்ந்ததும் தன்மானம் வேறு எங்கோ பறந்து போய்விட்டது.
சிலையாக நின்று கொண்டிருந்தவள் அண்ணனும் அண்ணியும் சென்ற திசை நோக்கி ஓடினாள்.
காரை நெருங்கி இருந்தார்கள் மதுரனும் மித்ராவும்.
"என் அண்ணன் உயிருக்கு போராடிகிட்டு இருக்கான். நீங்க இங்க வந்து உங்களோட பிடிவாதத்தை காட்டுறிங்களா?" மித்ரா கோபத்தோடு கேட்டாள்.
"உன் அண்ணனுக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் கொடு. நான் வேணாம்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா உன்னோடு உடம்பில் இருந்து கிட்னியை எடுத்து அவனுக்கு தரதை என்னால ஏத்துக்க முடியாது. நீ என் பொண்டாட்டி. உன்னோட தலையில இருந்து ஒரு முடி விழுந்தா கூட அதை என்னால தாங்கிக்க முடியாது. நீ ஒரு கிட்னியை தானம் பண்றதெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது.." என்றான் கடித்த பற்களின் இடையே.
மித்ராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"என் அண்ணன் செத்துப் போயிட்டா என்னாலயும்தான் தாங்கிக்க முடியாது.." என்று சொன்னாள் மித்ரா.
மனைவியின் முகத்தை பார்த்தான் இவன்.
"என்னை கொஞ்சமாவது புரிஞ்சிக்க நீ. என்னோட மொத்த சேமிப்பையும் உன் அண்ணனுக்காக நான் தரேன். தானம் பண்ற வேற யாரையாவது தேடி பிடிக்கலாம். உங்க அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. நீ இப்ப என்னோடு வீட்டுக்கு வா. உன்னை இங்கே விட்டா நீயே முடிவு எடுத்து கிட்னியை தந்துடுவ.." என்று சொன்னவன் தன் காரின் கதவை திறந்தான்.
"நான் எங்கேயும் வரமாட்டேன். என் அண்ணனோட உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். உங்களோட பணம் எனக்கு தேவை கிடையாது. என் அண்ணன் எனக்கு வேணும். உங்களோட காதல் பெருசுன்னா என்னோட பாசமும் பெருசுதான் எனக்கு. எங்கிட்டயே இரண்டு கிட்னி இருக்கும்போது நான் வேற யாரோ ஒரு தானம் செய்றவங்களை ஏன் தேடணும்.? என் அண்ணனுக்கு நானே கொடுத்துக்கிறேன்.." என்று சொன்னாள்.
மனைவியின் கண்களை உறுத்துப் பார்த்தான் இவன். சிவந்திருந்தன கண்கள். அவ்வளவு அழுகை அழுது இருந்தாள்.
"இன்னைக்கு நீ ஒரு எமோஷனல் மூடுல முடிவெடுக்காத.. இதுக்காக நீ நாளைக்கு வருத்தப்படுவ.." என்று சொன்னவன் அவளை காருக்குள் தள்ள முயன்றான்.
அதே நேரத்தில் அவனின் காலில் வந்து விழுந்தாள் நீலவேணி.
மதுரன் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.
தேம்பியபடி அண்ணனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த நீலவேணி "தயவுசெஞ்சி அண்ணியை கிட்னி தரதுக்கு விடு. என் புருஷனுக்கு உயிர் பிச்சை கொடு.." என்று கெஞ்சலாக கேட்டாள்.
கசப்பாக நகைத்தான் அவன்.
"நானே உன்கிட்ட பிச்சை எடுக்கிற நிலைமையில இருக்கேன். நீ எப்படி என்கிட்ட பிச்சை கேட்குற.?" என்று கேட்டான்.
இரு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டாள் நீலவேணி.
"தப்புதான். நான் பேசிய எல்லாமே தப்புதான். தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடு நீ. அதுக்காக என்னை அடிச்சிக்க. உதைச்சிக்க. என்னை என்ன வேணாலும் செஞ்சிக்க. தயவுசெய்து அண்ணியை இங்கிருந்து கூட்டி போகாத.." என்று அழுதாள்.
தனது கால் சட்டை பாக்கெட்டில் இருந்த கவரை எடுத்து தங்கையின் முன்னால் காட்டினான் மதுரன்.
"இது என்ன தெரியுமா? உன்னோட அப்பா எனக்கு கொடுத்த சம்பளம். என்னோட ஆபீஸ்லயே என்னை ஒரு வேலைக்காரனா மாத்தி இருக்க நீ. எனக்கு எவ்வளவு ஆத்திரம் வருதுன்னு உனக்கு சொன்னா புரியாது. மரியாதையா என் காலை விடு. இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்.." என்று மிரட்டினான்.
"என்னை நீ கொன்னாலும் பரவால்ல. தயவுசெஞ்சி அண்ணியை கூட்டி போகாத. எனக்கு எந்த சொத்தும் வேணாம். வேற எதுவுமே வேணாம். எல்லாத்துலயும் கையெழுத்து கூட போட்டு தரேன். தயவு செஞ்சி எனக்கு தாலி பிச்சை மட்டும் கொடு.." என்று இரு கைகளையும் கூப்பிக் கொண்டு அவனிடம் கெஞ்சினாள். மதுரன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அவளின் முகத்தை வெறித்தான்.
"நீ என் கண் முன்னாடியே செத்துப் போனா கூட எனக்கு கொஞ்சமும் மனசு ஆறாது. பிச்சைக்காரனாடி நான்? அன்னைக்கு எவ்வளவு வக்கனையா எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்த? இன்னைக்கு எதுக்காக இப்படி சீன் போட்டுக்கிட்டு இருக்க.." என்றவன் குனிந்தான். அவளின் தோளில் ஒற்றை கையை வைத்து பின்னால் தள்ளினான்.
கீழே விழுந்தாள் நீலவேணி. அப்போதும் அழுது கொண்டுதான் இருந்தாள்.
"உனக்கும் எனக்கும்தானே சண்டை.? என் புருஷன் உன்னை என்ன செஞ்சாரு.? அண்ணி கிட்னி கொடுத்தா அதுக்கான காசை கூட நான் உனக்கு கொடுத்துடுறேன்.." என்று கீழே விழுந்த பிறகும் கூட எழுந்து நின்று அவன் முகம் பார்த்து கெஞ்சினாள்.
இவன் அவளை திரும்பியும் பார்க்காமல் தன் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றான். ஆனால் மித்ரா நகரவும் மறுத்துவிட்டாள்.
"மித்ரா.. நீயும் பிடிவாதம் பிடிக்காத.." என்று அவன் சொன்னதும் அவனின் பிடியில் இருந்த தனது கரத்தை உருவினாள்.
"நான் இங்கிருந்து வரமாட்டேன்.." என்று பிடிவாதமாக சொன்னாள்.
"இவ இவ்வளவு அழறா. அப்பவும் உங்களுக்கு மனசு இறங்கல. என் அண்ணன் அங்கே உயிர்போகும் நிமிஷங்களை எண்ணிக்கிட்டு இருக்கான். அப்பகூட உங்களுக்கு மனசு இரங்கல. என் தலையில இருந்து ஒரு முடி விழுந்தா உங்களுக்கு உயிர் போகுமா.? அப்படின்னா என் அண்ணனோட உயிர் போனா எனக்கு எப்படி இருக்கும்ன்னு ஒரு செகண்ட் யோசிச்சி பார்த்திங்களா.? நம்மோட கல்யாணத்துக்காக அவன் எவ்வளவோ இறங்கி வந்தான். சின்ன வயசுல இருந்து என்னை தூக்கி வளர்த்திருக்கான் அவன். உங்களுக்கு சுயநலம் மட்டும்தான் ரொம்ப முக்கியமா போயிடுச்சி. ஆனா இந்த இடத்திலும் சுயநலம் தேவையா.?" என்றவள் மருத்துவமனை நோக்கி நடக்க முயன்றாள்.
தொடரும்.