sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 754
- Thread Author
- #1
56
இருக்கையில் சோர்வோடு சாய்ந்து அமர்ந்த மித்ரனை கவலையோடு பார்த்து நீலவேணிக்கு அனைத்து தப்பும் தன் மீதுதானோ என்று தோன்றியது.
"சாரிங்க.." என்றாள் மீண்டும்.
நெற்றியில் அடித்துக் கொண்டவன் "நீ ஏன்டி சாரி சொல்லி சாரி சொல்லியே என்னை சாவடிக்கிற.? உன் அண்ணன் பாசம்ன்னா என்ன பந்தம்ன்னா என்னன்னு தெரியாம அப்படி பண்ணதுக்கு நீ ஏன் சாரி கேட்கற.?" என்று எரிச்சலாக கேட்டான்.
"இல்லைங்க அவன் அண்ணியை கிட்னி தர விடாததுக்கு காரணம் நான் அனுப்பிய மெசேஜ்தான்.." என்றவள் தான் அனுப்பிய வாய்ஸ் மெயில் பற்றி அவனிடம் விவரித்தாள்.
புருவம் உயர்த்தி மனைவியை முறைத்தான் மித்ரன்.
"சாரிங்க.." என்று கொஞ்சலாக கெஞ்சினாள்.
"நான் ஏதோ ஒரு கடுப்புல அப்படி மெசேஜ் அனுப்பிட்டேன். ஆனா அந்த நாய் இந்த சந்தர்ப்பத்துல வந்து பழி வாங்கும்ன்னு நினைச்சி பார்க்கவே இல்ல.." என்றாள்.
எதிரில் நின்று கொண்டிருந்தவளை நோக்கி கையை நீட்டினான். புரியாமல் பார்த்தாள்.
அவளின் கையை பற்றினான். தன்னருகே இழுத்தான்.
அருகில் தன் அவள் அமர்ந்ததும் அவளின் புறங்கையின் மீது முத்தமிட்டான்.
அவள் மதுரனின் காலில் விழுந்த காட்சி கண் முன் வந்தது. அவளின் தன்மானம் எந்த அளவிற்கானது என்று இவனுக்கும் தெரியும். உயிரே போனாலும் தன் அண்ணனிடம் தலைகுனியக் கூடாது என்ற கொள்கையை உடையவள் நீலவேணி. அப்படிப்பட்டவள் தனக்காக அண்ணனின் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறாள் என்ற விஷயம் மித்ரனை அசைத்து விட்டது. எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.
அவளின் நகக்கணுக்களின் மீது முத்தமிட்டவன் "நீ சாரி கேட்கத் தேவையில்ல.." என்றான்.
"ஆனா என்னாலதானே உங்க தங்கச்சியும் அவனும் பிரிஞ்சிட்டாங்க.." விழிகள் கலங்க சொன்னாள்.
இடது கையால் அவளின் தலை மீது தடவினான்.
"நான் சரி பண்றேன். நீ பயப்படாம இரு.. கவலைப்படாம இரு.." என்று சொன்னவன் "போய் முகம் கழுவி வா. நிறைய அழுது கறை படிஞ்சி முகம் மாறிப் போய் இருக்கு.." என்றான்.
"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா.?" பயத்தோடு கேட்டாள்.
"ஒரு கோபமும் இல்ல. நான் சொல்றதையும் கொஞ்சமாவது நம்பு. எழுந்து போ.." என்று அவளின் தோளில் தட்டி அனுப்பினான்.
நீலவேணி முகம் கழுவி வந்தபோது மித்ரனும் மித்ராவும் அருகருகே அமர்ந்து காபியை பருகி கொண்டு இருந்தார்கள்.
நீலவேணிக்கான காபி மேஜையின் மீது இருந்தது. எடுத்துப் பருகினாள் இவள்.
"உனக்கு சட்டு சட்டுன்னு கோபம் வருது.." என்று தங்கையைத் திட்டினான் மித்ரன்.
"என் முடிவை பத்தி நீ தப்பா சொன்னா காஃபியை உன் மூஞ்சில ஊத்திடுவேன் பார்த்துக்க.. அந்த இடத்துல நீ நிஜமாவே அப்படி ஒரு நிலைமையில இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்.?" என்று திருப்பி கேட்டாள்.
தங்கையின் கையை பிடித்தவன் "நீ ஒரு செகண்ட் யோசிச்சி பாரு. எந்த மரமும் நட்ட உடனே காய் காய்க்காது. அவர் உன்னோட புருஷன். உன்னை முழுசா சொந்தம் கொண்டாடுபவர். நீ கிட்னியை கொடுக்கிறேன்னு நினைச்சது உன்னோட பாசம். ஆனா அவரால எப்படி உடனடியா ஏத்துக்க முடியும்.? உன்னோட பாசத்தை ஏத்துக்கவும் நீ டைம் கொடுத்திருக்கணும். மனைவி தன்னோட ஒரு கிட்னியை தானம் செய்யப் போறாங்கறது எந்த ஆணுக்கும் ஈசியா ஏத்துக்க கூடிய விஷயம் கிடையாது. அது கூட உன் மேல இருக்கும் பாசம்தான். முரட்டுத்தனமான பாசம் ஏதாவது ஒரு சூழ்நிலையில முட்டாள்தனமாதான் தோணும். கிட்னியை கொடுத்தா அண்ணனை காப்பாத்தலாம்ன்னு டாக்டர் சொன்னதும் என்ன ஏதுன்னு கூட ஒரு செகண்ட் யோசிக்காம கிட்னியை கொடுக்கணும்ன்னு நீ எடுத்த முடிவு ஒரு வகையான பாசம். அதே போலதான் அவரோடதும். தன் மனைவியோட உடம்புல இருந்து ஒரு பார்ட் போக போகுதுன்னு ஒரு நிலை வந்ததும் ஒரு சராசரி மனுஷனா நடந்துக்கிட்டாரு. அவருக்கு என் மேல பாசம் இருக்கு. அதனாலதான் வேற ஒரு டொனேட்டரை கண்டுபிடிக்கலாம்ன்னு உனக்கு சமாதானம் சொல்லி இருக்காரு. இரண்டு நாள் டைம் கொடுத்து இருக்காங்க டாக்டர். ஒருவேளை இது அத்தனையும் உண்மையா இருந்திருந்தா கூட நீ என்ன செஞ்சி இருக்கணும்.? தாலியை கழட்டி வீசி இருக்க கூடாது. உன் புருஷனோட போய் அந்த இரண்டு நாளும் கடைசி செகண்ட் வரைக்கும் அவரோட மனசை மாத்ததான் ட்ரை பண்ணி இருக்கணும்.." என்று பாடம் எடுத்தான்.
கைகளை கட்டிக்கொண்டு கால் மீது கால் போட்டபடி சோபாவின் ஒரு மூலையில் முதுகு சாய்ந்து அண்ணனை பார்த்தவள் "என்ன ஒரு அருமையான விளக்கம் தர நீ. அங்கே உணர்ச்சிவசத்தோட பிடியில நான் இருக்கும்போது இப்படி கணக்கு போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருப்பேனா? இல்ல மனசுல தோணுவதை செய்வேனா.?" என்று திருப்பி கேட்டாள்.
"முட்டாள்.." என்று தங்கையை திட்டியவன் "இவ ஏற்கனவே மெசேஜ் அனுப்பி அவரை கடுப்பேத்தி இருக்கா. இவங்க அப்பா குடும்பம் நல்லா இருப்பது பிடிக்காமலேயே அந்த மாதிரி ஒரு சம்பளத்தை கொடுத்து இருக்கிறாரு. இந்த நிலைமையில நீயும் கிட்னி தரப் போறேன்னு சொன்னதும் அவர் எப்படி உன்னை உடனே விடுவாரு.? அந்த நேரத்துல அந்த மனுஷன் எவ்வளவு கவலையில இருந்தாரோ? எத்தனை குழப்பம் அவர் மனசுக்குள்ள இருந்ததோ? ஒரு செகண்ட் கூட எதையும் யோசிக்காம ஈஸியா தாலியை கழட்டி வீசிட்ட.. ஏற்கனவே பேஜார்ல இருக்கிற மனுஷன் இப்ப வேற ஏதாவது பண்ணிக்க போறாரோன்னு பயமா இருக்கு எனக்கு.." என்று சொன்னான்.
மித்ராவின் முகத்தில் திகில் பரவியது. சில நாட்களாகவே மதுரனின் முகம் சரியில்லாமல்தான் இருந்தது. தனது கைபேசியை தேடினாள். அது அங்கே இல்லை. கணவனின் காரிலேயே இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
"உன் ஃபோனை குடு நீலா.." என்று அண்ணியிடம் கையை நீட்டினாள்.
"ஃபோன் வேண்டாம். நீ பேசாத. நான் போய் அவர்கிட்ட பேசுறேன்.." என்று சொல்லிவிட்டு காபியை குடித்து முடித்ததும் மாமனார் வீட்டிற்கு கிளம்பினான் மித்ரன்.
மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவனை "வாங்க மாப்பிள்ளை.." என்று வரவேற்றாள் இன்பா.
"மித்ரா எங்கே.?" என்று இவனிடம் விசாரித்தாள்.
அப்படியானால் மச்சான் வீட்டில் இன்னும் விஷயத்தை சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டவன் "அந்த வீட்டில இருக்கா அத்தை. மதுரன் எங்கே.?" என்று விசாரித்தான்.
"அவனோட ரூம்ல இருக்கான்.." என்று இன்பா சொன்ன வினாடி வேகமாக மாடி ஏறினான்.
மதுரனின் அறை கதவை திறந்தான்.
தனது உடைகளை எல்லாம் பேக் ஒன்றில் திணித்துக் கொண்டிருந்தான் மதுரன்.
கதவு திறக்கப்பட்டதும் திரும்பிப் பார்த்தான். தந்தையை எதிர்பார்த்து காத்திருந்தவன் இவனைக் கண்டு விட்டு நெற்றி சுருக்கினான்.
அதற்குள் அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி எழுந்து விட்டானா என்று குழம்பினான்.
"மதுரன்.." என்றபடி உள்ளே வந்த மித்ரன் அவன் செய்து கொண்டிருந்ததை கண்டுவிட்டு "வீட்டை விட்டு விட்டு போக போறிங்களா.?" என்று அதிர்ச்சியோடு கேட்டான்.
"நீங்க எப்படி இங்கே வந்திங்க.?" அவன் பதில் சொல்லாமல் தனது கேள்வியை கேட்டான்.
நடந்ததை சுருக்கமாக விவரித்த மித்ரன் "ஒரு மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்.. அவ ஏதோ கோபத்துல தாலியை கழட்டி கொடுத்துட்டா. நீங்க மனசுல வச்சிக்காதிங்க.." என்றான்.
"ஒன்னும் தேவையில்ல. எப்ப தாலியை கழட்டினாளோ அப்பவே அவ என்னை கொன்னுட்டா. உங்களை எதுக்காக சமாதானம் பேச அனுப்பி இருக்கா.?" என்று உடைந்த குரலில் கேட்டான் அவன். இப்போது கூட அவனிடம் கோபம் இல்லை. மாறாக வருத்தமும் சோகமும்தான் அதிகமாக இருந்தது.
அதைக் கண்டு மித்ரனுக்கு மனம் வலித்தது. உண்மையிலேயே தன் தங்கையை அளவுக்கு அதிகமாக விரும்புகிறான் இவன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
"உணர்ச்சிவசத்துல அவ அப்படி ஒரு முடிவு எடுத்துட்டா. அவ செஞ்சது தப்புதான். ப்ளீஸ் அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தயவு செஞ்சி அவளை மன்னிச்சிடுங்க.." என்றான் சிறு கெஞ்சல் குரலில்.
"தேவை கிடையாது. இந்த வீட்டுல எப்பவும் வேணிக்குதான் மதிப்பு. அதிகம் அதே போலதான் உங்க தங்கச்சிக்கும் என்னை விட நீங்கதான் முக்கியம்ன்னு தோணியிருக்கு. நான் ஒரு வேஸ்ட். ஒரு மகனா இருக்கவும் எனக்கு தகுதி கிடையாது. ஒரு கணவனா இருக்கவும் எனக்கு தகுதி கிடையாது. நான் இப்படியே இருந்துட்டு போறேன். நீங்க அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைங்க.." என்று சொன்னவன் அலமாரியில் இருந்த தனது மற்ற உடைகளையும் பேக்கில் திணிக்க ஆரம்பித்தான்.
நெற்றியை தேய்த்தான் மித்ரன்.
"அவ சின்ன பொண்ணு. இந்த விஷயத்துல நீங்க அவளை மன்னிக்கலாமே.."
"சாரி என்னால மன்னிக்க முடியும்ன்னு தோணல.. தயவுசெய்து நீங்க இங்க இருந்து போயிடுங்க. நான் இந்த வீட்டுல இன்னும் நாலு நிமிஷமோ அஞ்சி நிமிஷமோதான் இருப்பேன். இருக்கும் கொஞ்ச நேரத்தையாவது எரிச்சல் இல்லாம கடத்தணும்ன்னு நினைக்கிறேன்.." என்றான்.
பயங்கரமான கோபத்தில் இருக்கிறான் இவன். கோபம் தீர கூட நேரம் கொடுக்காமல் நாம் மேலும் பேசினால் அது வேறு ஏதாவது சிக்கலை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை புரிந்து கொண்ட மித்ரன் அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.
அவன் கீழே வந்த போது கபிலன் உள்ளே வந்தார்.
மாமனாரை கண்டதும் எதிரில் சென்று நின்ற மித்ரன் "நீங்க என்ன பண்ணி வச்சிருக்கிங்க.?" என்று அவரிடம் கோபப்பட்டான்.
"என்ன ஆச்சி மாப்பிள்ளை.? என்னாச்சி உங்க கைக்கு.? எப்படி காயமாச்சி.?" என்று அக்கறையாக விசாரித்தார்.
"என் மேல வச்ச அக்கறையில் கொஞ்சத்தை உங்க பையன் மேலயும் நீங்க காட்டி இருக்கலாம். எதுக்காக அவருக்கு நீங்க சம்பளம் கொடுத்திங்க.? உங்களோட இந்த முடிவால எவ்வளவு பெரிய பிரச்சனை தெரியுமா.? உண்மையிலேயே வேணியும் மதுரனும் இத்தனை வருஷமா சண்டை போட்டுக்க அவங்க காரணம் கிடையாது. நீங்கதான். அண்ணனும் தங்கச்சியும் சண்டை போட்டபோது ரெண்டு பேரையும் கூப்பிட்டு உட்கார வச்சி சமாதானம் சொல்லி இருக்கணும். அவங்களோட உறவின் மேன்மையை பத்தி கத்து கொடுத்திருக்கணும்.. அதை விட்டுட்டு அவங்க இரண்டு பேரும் சண்டை போடும்போது நீங்க ஒருத்தருக்கு மட்டும் சப்போர்ட் பண்ணி இன்னொருத்தரை மனமுடைய வச்சி அவங்களோட சண்டையை இன்னைக்கு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிங்க.." என்றான்.
"எல்லாத்தையும் நாங்க பண்ணிட்டோம் மாப்பிள்ளை. இரண்டு பேரையும் கூப்பிட்டு உட்கார வச்சக சமாதான உடன்படிக்கை செஞ்சி சலிச்சி போய்தான் கடைசியில நான் ஒருத்தருக்கு என் மனைவி ஒருத்தருக்குன்னு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சோம்." என்றார்.
மதுரன் அதே நேரத்தில் தனது பேக்கோடு படிகளில் இறங்கி வந்தான். இன்பா அவனின் பின்னால் துரத்திக் கொண்டு வந்தாள்.
"வீட்டை விட்டுப் போறேன்னு சொல்றாங்க இவன்.. என்னங்க பண்ணி வச்சிங்க நீங்க.?" என்று கணவரிடம் கேட்டாள்.
கபிலன் பெருமூச்சு விட்டார். மகனின் முன்னால் சென்று கைநீட்டி நிறுத்தினார்.
"சின்ன பையன் போல சில்லறைதனம் செய்யாத.." என்று கண்டிப்பு குரலில் சொன்னார்
மூக்கு சிவக்க தந்தையை பார்த்தவன் "நான் சில்லறைதனம் பண்றது போல உங்களுக்கு தெரியுதா.? உங்களுக்கு கடைசி வரைக்கும் உங்க பொண்ணுதான் முக்கியம். அவளை கூட்டி வந்து இந்த வீட்டுல வச்சி கொண்டாடுங்க. நான் போறேன்.." என்று சொன்னவன் தன் அம்மாவின் புறம் திரும்பினான்.
தனது கால் சட்டை பாக்கெட்டில் இருந்த சம்பள கவரை அம்மாவின் கையில் தந்தான்.
"இது உங்க புருஷன் எனக்கு தந்த சம்பளம்.." என்றான். இன்பா அதிர்ச்சியோடு தன் கணவனின் புறம் பார்த்தாள். அவரோடு நெற்றியை தேய்த்து கொண்டிருந்தார்.
"இத்தனை நாளா நானும் என் பொண்டாட்டியும் இந்த வீட்டுல சாப்பிட்டதுக்கு இந்த சம்பளத்தை வச்சி கணக்கு கழிச்சிக்கங்க.." என்று சொன்ன மதுரன் வெளியே நடந்தான்.
தொடரும்.