Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 57 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
777
57

கபிலன் மகனை பின்தொடர முயன்றார்.

இன்பா அழுதபடி மகனின் பின்னால் ஓட முயன்றாள்.

"நீங்க இரண்டு பேரும் இங்கேயே நில்லுங்க.." என்று மித்ரன் சொன்னதும் இருவரும் குழப்பத்தோடு அவனை பார்த்தார்கள்.
மதுரனும் கூட வாசல் படியில் நின்றபடி இவன் புறம் திரும்பிப் பார்த்தான்.

"ஏற்கனவே அவர் பயங்கர மன குழப்பத்துல இருக்காரு. நீங்க அதை இன்னும் அதிகப்படுத்த வேணாம். கொஞ்ச நாளைக்கு அவர் வெளியேவாவது தங்கட்டும். அவருக்கு கோபம் தீர்ந்த பிறகு நீங்க போய் பேசுங்க.." என்று சொன்னான்.

மதுரன் மச்சானை சில நொடிகள் பார்த்துவிட்டு வெளியே நடந்தான்.

காரை நோக்கி நடந்த மதுரன் அந்த காரும் தனது தந்தை வாங்கி தந்ததுதான் என்று புரிந்து சாவியை காரின் பேனட்டின் மீது வீசிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

சாலையில் இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். காருக்கு புக் செய்யலாம் என்று அவன் நினைத்த நேரத்தில் அவனின் அருகில் வந்து நின்றது மித்ரனின் பைக்.

"வந்து பைக்ல ஏறுங்க. நம்ம வீட்டுக்கு போகலாம்.." என்று சொன்னான்.

மதுரன் பற்களை அரைத்தது இவனுக்கும் கேட்டது.

"சரி சரி விடுங்க. அங்கேயும் நீலவேணி இருக்கா. மித்ரா இருக்கா. ரெண்டு பேரை பார்த்தா உங்க கோபம் அதிகமாகும்.." என்றவன் "நீங்க எங்க போகணும்ன்னு சொல்லுங்க. நான் லிப்ட் தரேன்.." என்றான்.

"நான் டாக்ஸியில போய்கிறேன்.." அவன் பிடி கொடுக்காமல் சொன்னான்.

"பரவால்ல வாங்க மச்சான்.." என்று அவனின் கையை பிடித்து இழுத்தான்.

எரிச்சலோடு வந்து பைக்கில் ஏறினான்.

"எந்த ஹோட்டல் போகணும்.?"

மதுரன் சொன்னதும் பைக்கை கிளப்பினான். மதுரனை ஹோட்டலில் விட்டான்.

"என் தங்கச்சி மேல நீங்க அளவு கடந்த காதல் வச்சிருக்கிங்க. அது அந்த லூசுக்கு தெரியல. நிச்சயம் ஒரு நாள் புரிஞ்சிப்பா.." என்று அவன் சொன்னதும் ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான் மதுரன்.

ஏனெனில் அவனுக்கு சப்போர்ட் செய்து ஒரு ஜீவன் பேசியிருந்தது. அதைவிட முக்கியமாக மித்ராதான் தவறு செய்தாள் என்று ஒத்துக் கொண்டான் இவன்.

"மித்ராகிட்ட நான் பேசுறேன்.." என்று சொல்லிவிட்டு பைக்கை திருப்பி வீட்டிற்கு கிளம்பினான்.

***

இதோ அதோ என்று இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது. மித்ராவும் மதுரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட இல்லை.
மித்ரனும் முடிந்த அளவிற்கு தன் தங்கைக்கு அறிவுரை சொன்னான். ஆனால் தன் கணவனாக வந்து அழைக்காமல் தான் அவனை தேடி செல்ல மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள் மித்ரா.

மதுரனிடமும் சென்று பேசினான் மித்ரன். சொல்லி வைத்தார் போல அவனும் இதையேதான் சொன்னான்.

"தப்பு செஞ்சது உங்க தங்கச்சி. அவதான் வந்து என்கிட்ட சாரி கேட்கணும். அவளை மன்னிக்க நான் தயார். ஆனா அதுக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க அவ தயாராக இருக்கணுமே.." என்றான்.

இருவரும் இப்படியே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதை கண்டு விட்டு மித்ரனுக்கு கடுப்பானது.

நீலவேணி எவ்வளவோ பரவாயில்லை என்று இப்போது தோன்றியது. தன் தங்கைக்கும் பிடிவாதம் உண்டு என்பதையே இந்த விஷயத்தில்தான் இவன் அறிந்து கொண்டான்.

மித்ரனின் முகத்தில் இருந்த சோபை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதை கண்டு நீலவேணிக்கு மனம் வாடியது.

அன்று கல்லூரி முடிந்ததும் தனது தோழிகளோடு சேர்ந்து பார்க் ஒன்றுக்குச் சென்றாள் நீலவேணி.

தோழிகள் இவளின் முகத்தைப் பார்த்தார்கள்.

"எப்பவும் பீலிங்காவே இருக்காரு அவரு. அவரை பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று தோழிகளிடம் சொல்லி கவலைப்பட்டாள்.

"அண்ணனை கூட்டிக்கிட்டு எங்காவது வெளியூர் டூர் போயிட்டு வா. அவருடைய மனசு சரியாகிடும்.." என்று சொன்னாள் ஒருத்தி.

"இல்ல. பிரச்சனைக்கு காரணம் உன் அண்ணனும் அண்ணியும்தான். நீ பேசாம உன் அண்ணன்கிட்ட போய் கெஞ்சி கூத்தாடி உன் அண்ணியையும் அவனையும் சேர்த்து வச்சிடு. அப்புறமா உன் புருஷனோட முகம் சரியாகிடும்.." என்று சொன்னாள் இன்னொருத்தி.

மூன்றாமவளோ ஊஞ்சலில் ஆடியபடி நீலவேணியின் முகத்தை பார்த்தாள்.

"நீயும் அண்ணனும் சந்தோஷமாதானே இருக்கிங்க.?" என்று விசாரித்தாள்.

"எங்க சந்தோஷமாக இருக்கோம்.? எப்பவும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்காரு.. எப்பவும் சோகமாதான் இருக்கோம் இரண்டு பேரும்.." சொன்னாள் இவள் வாடிய முகத்தோடு.

"அதை கேக்கலடி அந்த விஷயத்துல சந்தோஷமா இருக்கிங்களான்னு கேட்டேன்.." அவள் சொல்லவும் "யாருக்கு தெரியும் முன்ன பின்ன செத்து இருந்தாதானே சுடுகாடு தெரியும்.?" என்று சொல்லிவிட்டு ஊஞ்சலில்
அமைதியாக ஆடினாள் நீலவேணி.

தோழிகள் நால்வரும் அவளை குழப்பத்தோடு பார்த்தார்கள்.

"ஏன்டி இப்படி சொல்ற.?" என்று கேட்டாள் ஒருத்தி.

இடம் வலமாக தலையசைத்த நீலவேணி "எனக்கு பயமா இருக்கு. அவருக்கு டைம் இல்ல.." என்றாள்.

தோழிகள் அவளை முறைத்தார்கள்.

"நிஜமாதான். ஏதோ கேஸ் விஷயமா வேலை செஞ்சிட்டு இருக்காரு.. வீட்டுக்கு வந்த பிறகும் அதேதான் பாத்துட்டு இருக்காரு.. மிச்ச நேரத்துல மதுரனும் மித்ராவும் பிரிஞ்சி இருக்க காரணம் நான்தான்னு சொல்லி புலம்பிட்டு இருக்காரு.. இந்த இரண்டு வாரமா ரெண்டு பேரும் கிஸ் தந்துக்க கூட இல்ல.‌" என்றாள் தரையில் இருந்த மண்ணை செருப்பால் அள்ளி காற்றில் இறைத்தபடி.

தோழிகள் அவளை பரிவோடு பார்த்தார்கள்.

"அண்ணனோட கவலையை மறக்கடிக்க எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு.." என்றாள் ஒருத்தி.

"என்ன ஐடியா? வெளியூர் போக சொல்லாதிங்க. நான் கூப்பிட்டா வரமாட்டாரு.." ஊஞ்சல் கம்பியில் தலையை சாய்த்து கொண்டு சொன்னாள் நீலவேணி.

"வெளியூர் இல்ல.. இங்கேயேதான் அவரோட சோகம் தீரணும்ன்னா நீ அவரோட முழு மனைவியா மாறணும்.." என்று சொன்னாள் ஒருத்தி.

"வேணாம். அப்புறம் அவர் என்னை அலைஞ்சான் கேஸ்ன்னு சொல்லிடுவாரு.." சோகத்தோடு சொல்லியபடி நீல வானத்தை பார்த்தாள்.

"இவ யாரு முட்டாளா இருக்கா.? அலைஞ்சான் கேஸ்ன்னு சொல்ல மாட்டாங்க. அதுக்கு பதிலா அவரோட சோகம்தான் தீரும். புருஷன் பொண்டாட்டின்னா இரண்டு பேர்தான். ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் ஸ்டெப் எடுத்துதானே ஆகணும்.?" என்று சொன்ன தோழிகள் அவளை பார்க்கிலிருந்து இழுத்துக் கொண்டு மால் ஒன்றுக்குள் நுழைந்தார்கள்.

ஐவருமாக உள்ளாடைக் கடை ஒன்றினுள் நுழைந்தார்கள். நீலவேணிக்கான உடைகளை தோழிகளே தேர்ந்தெடுத்து தந்தார்கள்.

"இதையெல்லாம் உயிர் போனா கூட நான் போட மாட்டேன்.." என்று சொன்னவளின் பின்னந்தலையில் தட்டினாள் ஒருத்தி.

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் பண்ணிட்டு இருக்கேன். எடுத்த உடனே எங்களை டிஸ்கரேஜ் பண்றியா.?" என்று திட்டினாள்.

மற்றொருத்தியோ "உன்னை நான் நம்ப மாட்டேன்.. டிரஸ் போட்டுட்டு எங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்புற.." என்று மிரட்டினாள்.
நீலவேணி பூம்பூம் மாடு போல தலையை ஆட்டினாள். "இந்த டிரெஸ்ஸை போட்டா சாமி கண்ணை குத்தும்.." என்றவளின் தலையில் கொட்டினாள் ஒருத்தி.

"உனக்கு அண்ணன் சந்தோஷமாக இருக்கணுமா வேணாமா.?" என்று கேட்டாள்.

நீலவேணி மௌனமாக நின்றாள். "நாங்க சொல்வதை நீ கேளு. அப்புறமாக பாரு அண்ணனோட டென்ஷன் எல்லாம் போய்டும்.." என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மற்றொரு உடை கடையில் நுழைந்தார்கள்.

ரெடிமேட் சேலை ஒன்றை தேர்ந்தெடுத்து நீலவேணியின் கையில் திணித்தார்கள்.

"அந்த தொள தொள நைட் டிரஸ்ஸை ஓரம் கட்டிட்டு இன்னைக்கு ஒருநாளாவது இந்த சேலையை கட்டு. உனக்கு சேலை கட்ட தெரியாதுன்னு தெரியும்..‌ அதனாலதான் ரெடிமேட் வாங்கி தரோம்." என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு மற்றொரு கடைக்குள் நுழைந்தார்கள்.

அவளுக்கான அலங்கார பொருட்கள் அத்தனையும் வாங்கினார்கள்.

"நல்ல சூப்பரா மேக்கப் பண்ற.? சேலையை கட்டிட்டு மொத்தமா போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்புற சரியா.?" என்று கேட்டாள் தோழி.

அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டினாள்‌ இவள்.

தயக்கத்தோடு வீடு வந்து சேர்ந்தாள். வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அலமாரிக்குள் அடைத்து வைத்தாள்.

தோழிகள் மெசேஜ் அனுப்பினார்கள்.

"இன்னும் மேக்கப் செய்யலையா.? ரெடி ஆகலையா.?" என்று கேள்விகளாக கேட்டு துளைத்தார்கள்.

"என் நாத்தனார் இருக்காங்க. சாப்பிட்டு முடிச்ச பிறகு நான் புடவை கட்டுறேன்.." என்று தகவலை அனுப்பியவள் வியர்த்த முகத்தோடு இருக்கையில் சாய்ந்தாள்.

கை கால்கள் நடுங்கியது. கொலை செய்ய நினைத்தால் கூட இப்படி பயம் தோன்றி இருக்குமா என்று தெரியவில்லை.

இரவு வந்தது. மூவருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.

மித்ரன் நீலவேணியின் வியர்வை வழியும் முகத்தைக் கண்டு குழம்பினான்.

"என்ன ஆச்சி.?" என்று விசாரித்தான்.

"ஒன்னும் இல்ல. லேசா தலைவலி.." என்றவளின் தலையை தொட்டுப் பார்த்தவன் "தலைவலி பெருசா இல்ல. நீ டென்ஷனா இருக்கியோ என்னமோ.? போய் ரெஸ்ட் எடு.." என்று சொன்னான்.

நீலவேணி அறைக்குள் புகுந்தாள்.

மித்ராவுக்கு உணவு சரியாக இறங்கவில்லை. உணவை பாதியிலேயே ஒதுக்கி வைத்துவிட்டு கையை சுத்தம் செய்து கொண்டு பின்வாசலுக்கு நடந்தாள். தங்கையின் செயலை பார்த்துக் கொண்டிருந்த மித்ரனுக்கு கவலையாக இருந்தது.

பின்வாசல் திண்ணையின் தூணோடு சாய்ந்து அமர்ந்தாள் மித்ரா.

தங்கையின் மனநிலையைப் பற்றி கவலைபட்டப்படியே தனது அறைக்கு வந்தான் மித்ரன்.

புடவை கட்டி அலங்காரமெல்லாம் செய்து, தலை நிறைய பூ வைத்து தலை குனிந்து அமர்ந்திருந்த நீலவேணியை கண்டவன் யோசனையோடு அவளின் அருகில் வந்தான்.

"என்ன புதுசா சேலையெல்லாம்.?" என்று சந்தேகத்தோடு கேட்டான்.

உதட்டை கடித்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினாள். தடுமாற்றத்தோடு நிமிர்ந்தவள் "அது சு.. சும்மா.." என்றாள்.

"முகத்துல எதுக்காக இவ்வளவு பயம்.?" எனக் கேட்டவனுக்கு தங்கையின் சோர்ந்த முகம் நினைவுக்கு வந்தது. அவள் ஏன் உணவு உண்ணவில்லை என்ற கேள்வி அவனின் மனதை அரித்தது.

மனைவியின் முகம் பார்த்தவன் "நீ தூங்கு. நான் மித்ராவோட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டு கதவு நோக்கி நடந்தான்.

"பரவால்ல.." என்று அவள் சொன்னதும் திரும்பி பார்த்தான்.

"நீங்க வர வரைக்கும் வெயிட் பண்றேன்.." என்றாள். இவனுக்கு புரியவில்லை.

பதில் சொல்லாமல் வெளியே நடந்தான்.

தங்கையிடம் வந்தான். அவளருகில் அமர்ந்தான்.

அவளின் தலையை வருடினான். "என்ன ஆச்சி தங்கம்.?" என்று விசாரித்தான்.

"அவர் கடைசி வரைக்கும் வந்து மன்னிப்பு கேட்க மாட்டாரா அண்ணா.?" என்று கலங்கும் குரலோடு கேட்டாள்.

இவன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தயங்கினான்.

"எனக்கு கஷ்டமா இருக்கு. எதுக்காக அவரை காதலிச்சோம்ன்னு வருத்தப்படுறேன்.." என்றவளிடம் "நீ அப்படி நினைக்காத. அவர் உன்னை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறாரு. இரண்டு வாரம் காத்திருக்க.. இன்னும் கொஞ்ச நாள் காத்திரு.. கண்டிப்பா அவரே உங்கிட்ட ஓடி வருவாரு.." என்று சொன்னான்.
"காத்திருக்க பயமா இருக்கு அண்ணா.." என்று சொன்னவள் தனது கையில் இருந்த பிரகனென்சி டெஸ்ட் கிட்டை காட்டினாள்.

அதை கண்டதும் இவனுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.

அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கம்.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"ஆனா எனக்கு பயமாயிருக்கு அண்ணா.." என்றால் நடுங்கும் குரலில்.

"என்னோட அண்ணன் பாசத்தை அவரால புரிஞ்சிக்க முடியல.. அவர் மேல தப்பு இருக்கு. ஆனாலும் மன்னிப்பு கேட்க மனசு வரல. காலம் முழுக்க இப்படியே போயிடுமோன்னு பயப்படுறேன்.." என்றாள் உடைந்த குரலில்.

"ஒரு சில விஷயங்கள் சிலருக்கு புரிய நேரம் ஆகும் கண்ணம்மா. அந்த சூழ்நிலையில அவங்க நின்னா மட்டும்தான் நம்மோட மனநிலை என்னன்னு அவங்களுக்கு தெரியும். நீ இந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்லு. கண்டிப்பா ஓடி வந்துடுவாரு.." என்று சொன்னான் மித்ரன்.

"என்னால முடியாது அண்ணா.." என்ற தலையாட்டியவள் "என்னை எனக்காக தேடி வரணுமே தவிர குழந்தைக்காக தேடி வரக்கூடாது.." என்றாள்.

தொடரும்
 
  • Love
Reactions: Anu
Back
Top