Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 62 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
754
62

மற்ற நண்பர்கள் இருவரும் உள்ளே வந்தார்கள்.

செத்து கிடந்த கொலைகாரனை கண்டுவிட்டு "என்ன ஆச்சி.?" என்று விசாரித்தார்கள்.

"நான்தான் கொன்னேன். என்கிட்ட பைட் பண்ணா யாராலும் ஜெயிக்க முடியாது.." என்று உளறல் போல சொன்ன நீலவேணியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தான் மித்ரன்.

"நிஜமா அழறியா.? எனக்காகவா.?" என்று கணவனின் முகத்தை பார்த்தபடி கேட்டாள் நீலவேணி.

"என்னை சாகடிக்காதடி. கொஞ்ச நேரம் பேசாம இரு.. இப்படி நீ பேசிகிட்டு இருந்தா அப்புறம் ரத்தம் உறையாம போய்டும்.." என்று சொன்னான்.

நீலவேணி சிரித்தபடியே கண்களை மூடினாள்.

"என் கூடவே இரு.." என்று சொன்னாள்.

"கூடவே இருப்பேன். பயப்படாம இரு.." என்ற மித்ரன் அவளை தூக்கி சென்று மதுரனின் காரில் படுக்க வைத்தான்.

"மித்ரா நீ காரை ஓட்டுறியா.?" மதுரனின் கேள்வியில் திகைத்தாள் மித்ரா.

அதன்பிறகுதான் அவனின் முகத்தைப் பார்த்தாள். கைகள் இரண்டும் நடுங்கிக் கொண்டிருந்தன. வியர்வையில் முகமும் உடம்பும் மொத்தமாக நனைந்து கொண்டிருந்தது. கீழ் உதட்டை கொஞ்சம் கடினமாகவே கடித்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால் கண்களில் கண்ணீர் எதுவும் தென்படவில்லை.

"சரி.." என்று அவள் சொன்னதும் பக்கத்து இருக்கைக்கு மாறி அமர்ந்து கொண்டான்.

நீலவேணியை பார்த்தான் மதுரன். மித்ரனின் மடியில் சாய்ந்திருந்தவள் அவனின் கையை இறுக்கமாக பற்றி கொண்டிருந்தாள். மித்ரன் அவளின் முகத்தை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு ஒன்னும் ஆகாது.." என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.

மித்ரா காரை ஸ்டார்ட் செய்தாள்.

***

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த எரிந்து போன மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அங்கே செத்து கிடந்த சைக்கோ கொலைகாரனை கண்டுவிட்டு வழக்கை பதிவு செய்தார்கள்.

மித்ரனின் மற்ற இரு நண்பர்களும் காவல்துறைக்கு உதவியாக இருந்து அந்த வழக்கிற்கு தேவையான மற்ற தகவல்களையும் கொலைகாரனை பற்றிய மீதி விஷயங்களை சொன்னார்கள்.

"ஏங்க சார் படிச்ச வக்கீல் நீங்களே இப்படி செய்யலாமா.? உங்களுக்கு ஒரு மிரட்டல் வந்ததும் நீங்க நேரடியா போலீஸ்கிட்டதானே வந்திருக்கணும்.?" என்று கேட்டார் காவல்துறை அதிகாரி.

"என்ன சார் செய்றது? புத்தியா பாசமான்னு பாத்தா எப்பவும் பாசம்தான் ஜெயிக்குது. இந்த பொண்ணுங்க இரண்டு பேரையும் பத்திரமா வீட்டுக்கு கூட்டிப் போகணுங்கற நினைப்புல எங்களுக்கு வேற எதுவும் தோணல.." என்று சொன்னான் ஒருவன்.

"சரி கவலைப்படாதிங்க.. அந்த பொண்ணு பிழைச்சிடும்.." என்றார் அந்த காவலர்.

குளமாக தேங்கி நின்றிருந்த நீலவேணியின் ரத்தத்தை பார்த்து கவலை கொண்டார்.

'இவ்வளவு ரத்தம் சென்ற பிறகும் அந்தப் பெண் உயிர் பிழைப்பாளா.?" என்று பயம் உண்டானது அவருக்கு.

மருத்துவமனையில் மித்ரனும் மதுரனும் உணர்ச்சிகளை தொலைத்து விட்டு அமர்ந்திருந்தார்கள்.

உண்மையில் இங்கே அதிகமாக செயல்பட்டது மித்ராதான். மருத்துவர்கள் கேட்ட தகவல்களை எல்லாம் கூறி, நிரப்ப வேண்டிய பார்ம்களையெல்லாம் நிரப்பி, அண்ணனிடம் கையெழுத்து வாங்கி கொடுத்து, நீலவேணிக்கு தேவையான மருந்து மாத்திரைகளை மருத்துவர் எழுதிக் கொடுத்ததும் ஓடி சென்று அதை மெடிக்கலில் வாங்கி வந்து கொடுத்து, ஒவ்வொரு முறை வெளியே வந்த மருத்துவரிடமும் செவிலியரிடமும் நீலவேணியின் உடல் நிலையை பற்றி விசாரித்து, அவர்கள் சொன்ன அத்தனை விஷயங்களையும் காதில் வாங்கிக் கொண்டு.. அங்கே பொறுப்புள்ள ஒரே ஆளாக இருந்தாள் அவள்.

சிகிச்சை நடைபெற்றுக் கொண்டே இருந்தது. மருத்துவர்கள் இன்னும் தகவலை சொல்லாமல் இருந்தார்கள்.

நேரங்கள் இவர்கள் மூவரையும் பார்த்து ஏளனமாக சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.
"வயித்துலதானே கத்தி குத்து பட்டிருக்கு.. அவ உயிர் பிழைச்சிடுவா.." என்று தன் அண்ணனுக்கும் கணவனுக்கும் இடையில் அமர்ந்து சொன்னாள் மித்ரா.

இருவருமே அவளுக்கு பதில் சொல்லவில்லை. மித்ரனின் கையிலும் சட்டையிலும் ரத்தம் இருந்தது. மித்ராவின் உடையிலும் கூட நீலவேணியின் ரத்தம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.

உடையில் இருந்த ரத்தத்தை நீக்க முடியாவிட்டாலும் கைகளில் இருக்கும் ரத்தத்தையாவது சுத்தம் செய்து வரலாம் என்று நினைத்து தனது அண்ணனை அழைத்துக் கொண்டு கழிவறைக்கு சென்றாள் மித்ரா.

அண்ணனின் கைகளை அவளே சுத்தம் செய்தாள்.

அவனின் பார்வை நிலையாக நின்றபடி இருப்பதை கண்டு விட்டு அவனின் தோளில் கரம் பதித்தாள்.

"அவளுக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாத.." என்று தைரியம் சொன்னாள்.

"எவ்ளோ ரத்தம் போயிடுச்சி.. இப்படி அந்த கொலைகாரன் உங்களை கடத்திட்டு போவான்னு யோசிக்கவே இல்ல மித்ரா. சாரி.." என்று சொன்னவன் சிந்திய தன் கண்ணீரை ஈர கைகளால் துடைத்தான்.

அவனின் கன்னத்தைப் பற்றி தன் முகத்தை பார்க்க வைத்தவள் "தப்பு உன் மேல கிடையாது.. ஒரு சைக்கோ கொலைகாரன் காரணம் இருந்தாலும் கொல்லுவான். காரணம் இல்லன்னாலும் கொல்லுவான். நீ இதை பத்தி யோசிச்சி டைம் வேஸ்ட் பண்ணாத. அவன் செத்துட்டான்.." என்று சொன்னாள்.

கபிலனும் இன்பாவும் மருத்துவமனைக்குள் ஓடி வந்தார்கள். வெண்முகிலி ஒரு அலுவல் பயணமாக வெளிநாட்டிற்கு சென்று இருந்தாள்.

தந்தையையும் தாயையும் கண்டுவிட்டு எழுந்து நின்றான் மதுரன்.

அவர்களை கண்டதும் அவனின் விழிகள் கலங்கியது. கண்ணீர் இமைகளை நனைத்தது.

"என்னடா ஆச்சி.?" என்று மகனின் அருகில் வந்து கேட்டாள் இன்பா.

"வேணிக்கு.. வேணிக்கு.." என்று சொல்ல முயன்றான். ஆனால் வார்த்தைகள் வர மறுத்தது.

"என்னடா ஆச்சி அவளுக்கு.?" என்று பயத்தோடு கேட்டார் கபிலன்.

சொல்ல முடியவில்லை அவனால். வார்த்தைகள் வரவேயில்லை.

நல்ல வேளையாக அதற்குள் மித்ரனும் மித்ராவும் அங்கே வந்து விட்டார்கள்.

மாமனார் மாமியாரை பார்த்தவர்கள் அருகில் வந்தார்கள். விஷயத்தை மித்ராதான் விளக்கி சொன்னாள்.

இன்பா தனது முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

"அவளுக்கு ஒன்னும் ஆகாது அழாதிங்க அத்தை.." சமாதானம் சொன்னாள் மித்ரா.

"சின்ன பொண்ணு.. இவ்வளவு ரத்தம் போயிருக்கு.. எப்படி சமாளிச்சி வருவாளோ.?" என்று கேட்டபடி அங்கிருந்து இருக்கையில் உடைந்து அமர்ந்தார் கபிலன்.

மருத்துவர்கள் வெளியே வந்தார்கள்.

"என்ன ஆச்சி.?" என்று ஓடி சென்று அனைவரும் விசாரித்தார்கள்.

"சில செக்கப் போயிட்டு இருக்கு. விஷயத்தை விரிவா சொல்ல எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்.." என்று சொன்னார்கள் மருத்துவர்கள்.

'இன்னும் பரிசோதனையா? அப்படி என்றால் மகளுக்கு என்னதான் ஆயிற்று?' என்று பெற்றோர்கள் மேலும் பயந்தார்கள்.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. யாருமே உணவை உண்ணவில்லை. தாமதமாக வந்து சேர்ந்த அனுபமாதான் அவர்களுக்கு ஹாஸ்பிடல் கேண்டினில் இருந்து தேநீர் வாங்கி வந்து தந்தாள்.

கடமைக்கு என்று குடித்தார்கள் ஐவரும். யாருமே வீட்டிற்கு செல்லவில்லை.

மாலை சூழ்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களை மாறி மாறி பார்த்த மதுரன் எழுந்து நின்றான்.

மித்ராவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கேண்டினுக்கு நடந்தான்.

மித்ராவை இருக்கை ஒன்றில் அமர வைத்து விட்டு சென்றவன் அவளுக்கு இட்லியை வாங்கி வந்து தந்தான்.

"எனக்கு பசிக்கல.." என்றவளின் முன்னால் அமர்ந்தவன் "பாப்பாவுக்கு பசிக்கும். சாப்பிடு.." என்றான் கரகரத்த குரலில்.

அவளுக்கும் இப்போதுதான் வயிற்றில் இருக்கும் அந்த வளரும் ஜீவனை பற்றி நினைவு வந்தது.

தயக்கத்தோடு இட்லியை உண்ண ஆரம்பித்தாள். மதுரனின் யோசனை முழுக்க வேறு இடத்தில்தான் இருந்தது.

உணவை உண்டு கொண்டிருந்தவள் பாதியில் நிமிர்ந்து பார்த்தாள்.

அலைபாய்ந்து கொண்டிருந்த கணவனின் கண்களைப் பார்த்தவள் "உங்க தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாதிங்க.." என்றாள்.
இவன் பதில் சொல்லவில்லை.

"ரொம்ப கவலையா இருக்கா.?" என்று சில நொடிகளுக்கு பிறகு கேட்டாள் மித்ரா.

"ச்சே.. ச்சே.. எனக்கு என்ன கவலை.?" என்று மறுத்தவன் "அவ எப்படி போனா‌ எனக்கு என்ன.?" என்றான்.

உதடுகள்தான் இந்த வார்த்தையை சொன்னது. ஆனால் அவனின் விழிகளில் பிரதிபலித்த இதயத்தின் காயம் அவளுக்கு வேறு ஏதோ ஒன்றை சொன்னது.

"அங்கே என்ன நடந்தது தெரியுமா.?" என்று மித்ரா கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான்.

"என்ன நடந்தது.?" என்றான் பயத்தோடு.

ஒருவேளை அந்த கொலைகாரன் பெண்கள் இருவரிடமும் தவறாக நடந்து கொண்டிருப்பானோ என்று நினைத்து பயந்தான் இவன்.

"அவன் என்னைதான் கொல்ல வந்தான்.." என்று மித்ரா சொன்னதும் அதிர்ந்தான் மதுரன்.

"ஆனா எப்படி.?" திக்கி திணறி கேட்டான்.

"உங்க தங்கச்சி குறுக்கே புகுந்து என்னோட கத்திக்குத்தை வாங்கிக்கிட்டா.. வயித்துல குத்து வாங்கிய பிறகு அவ என்ன சொன்னா தெரியுமா.? 'என் அண்ணனோட குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது'ன்னு.." சொல்லும்போதே மித்ராவின் விழிகள் கலங்கி கண்ணீர் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் விழுந்தது.

மதுரன் சர்வமும் அடங்கி, சகலமும் உறைந்து அமர்ந்த இடத்திலேயே சிலையாகி விட்டான். உணர்வுகள் செயல்பட மறுத்தன. யோசனைகள் உதிக்க மறுத்தன. உண்மையில் அவள் இப்படித்தான் சொல்லி இருப்பாளா என்ற அவநம்பிக்கை ஒருபுறம் தோன்றினாலும் அவளின் வயிற்றில் இருந்த காயங்கள் அவனுக்கான ஆதாரத்தை கண் முன் காட்டின.

ஈரம் படர்ந்த இமைகளை சிமிட்டி சிமிட்டி மறைத்துக் கொண்டான்.

"ரொம்ப சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்.. ஆனா அவ செஞ்ச காரியத்தை என்னால கனவுல கூட மறக்க முடியாது‌. என் தெய்வமே அவளோட ரூபத்துல வந்தது போல இருந்தது.." என்று சொன்ன மித்ரா "அவ எப்படியாவது உயிர் பிழைக்கணும்‌. இல்லன்னா காலத்துக்கும் நான் நடைபிணம் ஆயிடுவேன்.." என்றாள்.

மனைவி சொன்ன எதுவும் மதுரனின் காதுகளில் கூட விழவில்லை.

***

மித்ரன் தன் மனைவியின் கைபேசியோடு மருத்துவமனையின் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். அவள் குணமாகி எழ வேண்டும் என்று காத்திருந்தான்.
அலைபாய்ந்து கொண்டிருந்த மனதோடு மனைவியின் கைபேசியை திறந்தான். எந்த நோக்கமும் இல்லாமல் அதையும் இதையுமாக பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு வாட்ஸ்அப் குரூப் உரையாடலை கண்டு திகைத்தான்.

நீலவேணியும் அவளின் தோழிகளும் உருவாக்கி வைத்திருந்த குரூப் அது. ஐவர் மட்டுமே இருந்த அந்த குரூப்பில் உரையாடல்கள் மட்டும் எக்கச்சக்கமாக இருந்தன.

நேற்றைய இரவில் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்ததை கண்ட பிறகுதான் இவனுக்கு இதயத்தின் வலி அதிகமானது.

வேணி; எனக்கு பயமா இருக்கு.

ஷீலா; எப்படி இவ எதுக்கெடுத்தாலும் பயமா இருக்குன்னு சொல்றா? பேசாம நீ வந்துடு. நான் அங்கே வரேன்.

தியா; செருப்பு ஆன் த வே ஷீலா.. மித்ரன் அண்ணா நம்ம எல்லோருக்கும் கூட பிறக்காத சகோதரர் போல. கிண்டலுக்கு கூட இந்த மாதிரி எதுவும் நீங்க பேசக்கூடாது.

வேணி; எனக்கு ஐடியா சொல்லுங்க..

பூச்சு குட்டி; அதுதான் சாயங்காலமே ஐடியா கொடுத்துட்டோமே.. அழகா டிரஸ் பண்ண வெயிட் பண்ணு. அண்ணன் மீதியை பார்த்துப்பாரு..

வேணி; இதுதான் பயமா இருக்கு. வாழ்க்கையில பஸ்ட் நைட் கண்டிப்பாக தேவையா.?

ஷீலா; நாங்க வாங்கி தந்த டிரஸ்சை போட்டு இருக்கியா இல்லையா.?

வேணி; போட்டு இருக்கேன்டி. ரொம்ப வித்தியாசமா இருக்கு.. சேலை காலை தட்டுற மாதிரியே இருக்கு. லிப்ஸ்டிக் போட்டிருந்தேன்.. ஆனா பயத்துல உதட்டை கடிச்சி கடிச்சி லிப்ஸ்டிக் எல்லாம் சாப்பிட்டுட்டேன்.

பூச்சி குட்டி; லிப்ஸ்டிக்கை சாப்பிட்டியா? தண்டம்.. தண்டம்.. ஒரு வேலையை உன்னால உருப்புடியா செய்ய முடியுதா.? உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு எங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுறாரோ தெரியல..

வேணி; இப்ப எனக்கு ஒரு வழி சொல்லுங்க.

தியா; இதுக்கு மேல என்ன வழி சொல்றது? அண்ணன் வந்ததும் கிஸ் பண்ண ஆரம்பிச்சிடு. அப்புறம் அதுவா பாதை போட்டு தந்துடும்.

வேணி; பர்ஸ்ட் நைட் நடந்தா நிஜமாவே அவரோட டென்ஷன் எல்லாம் போயிடுமா? பழையபடி நார்மலுக்கு மாறிடுவாரா?

ஷீலா; கண்டிப்பா மாறிடுவாரு. நீ என்னை நம்பு.

வேணி; பயமா இருக்கு. அலைஞ்சான் கேஸ்ன்னு அவர் சொன்னாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் அவரோட மனசாவது பழையபடிக்கு மாறிட்டா போதும்.

பூச்சி குட்டி; அலைஞ்சான் கேஸ்ன்னு சொல்ல மாட்டாருடி. நீயா அப்படி நினைச்சிக்காத.. நீ புடவை கட்டி அழகா ரெடியாகி உட்கார்ந்து இருப்பதை பார்த்தாலே அவருக்கு எல்லாம் புரிஞ்சிடும்.

வேணி; அவர் வராரு போல இருக்கு. நான் நாளைக்கு மெசேஜ் பண்றேன்.

அத்தோடு அவர்களின் உரையாடல் முடிந்து இருந்தது.

மித்ரனுக்கு நேற்றைய இரவு நினைவிற்கு வந்தது.

என்றும் இல்லாத அதிசயமாக அவள் புடவை கட்டி அலங்காரம் செய்து அமர்ந்து காத்திருந்தது எதற்காக என்று புரிந்ததும் தொண்டை அடைத்துக் கொண்டது.

மன குழப்பத்தில் மனைவியை கூட கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோமே என்று மனம் உடைந்தான்.

பயத்தையும் பதட்டத்தையும் தாண்டி எத்தனை கனவுகளை கண்டிருந்தாளோ?

இத்தனை தயக்கமும் தடுமாற்றமும் இருந்தும் கூட கணவனின் மனநிலையை மேம்படுத்த வேண்டும் என்று இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளாள் இவள் என்று புரிந்து சிறு சிரிப்பும் வந்தது.

ஆனாலும் அவள் தனக்காக யோசித்ததை நினைக்கையில் உள்ளூர பெருமையாகவும் இன்பமாகவும்தான் இருந்தது. 'சீக்கிரம் குணமாகிடு வேணி..' என்று மனதோடு சொன்னான்.
 
  • Like
Reactions: Anu
Back
Top