Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 64 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
777
64

நீலவேணி சொன்னது கேட்டு வலித்தது அனைவருக்கும்.

திட்டமிட்டு கத்தி குத்தப்பட்டு உள்ளது என்று மருத்துவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் இவர்களுக்கு புரிந்தது.
அங்கிருந்த மூவரையும் மாறி மாறி பார்த்தவள் "அந்த சனியன் எங்கே போய் தொலைஞ்சான்.? ஒரு சாங்கியதுக்காவது இங்கே வந்து எட்டிப் பார்த்து இருக்கலாம் அந்த நாய்.. அவனுக்கு குழந்தை பிறந்ததுன்னா நான் போய் எட்டி கூட பார்க்க மாட்டேன்.." என்று கடித்த பற்களோடு சொன்னாள்.

அங்கிருந்தவர்கள் அவளை குறும்பாக முறைத்தார்கள்.

"உனக்கு கத்திக்குத்து பட்டதுல பீல் ஆகி வீட்டிலேயே அழுதுட்டு படுத்து இருக்கான் உன் அண்ணன்.." என்று மித்ரன் சொன்னதும் அதிர்ச்சியோடு திரும்பியவள் "அந்த நாயா.? அழுதுச்சா.? நிஜமாவா.? நம்புற மாதிரி இல்லையே.." என்றாள்.

"உன்னோடது வாயா வேணி.? எதுக்காக இவ்வளவு பேசுற.?" என கேட்டு அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினான் மித்ரன்.

அவனின் கையை தட்டி விட்டாள். "கிள்ளாத. வலிக்குது.. என்றவள் "முக்கியமா உன் தங்கச்சி முன்னாடி கிள்ளாத.. அப்புறமா நம்ம ரெண்டு பேரையும் பத்தி தப்பா நினைச்சிப்பாங்க.." என்று சிணுங்கலாக சொன்னாள்.

"வாயாடி வாயாடி.." என்று அவளின் மறுபக்க கன்னத்தை பிடித்து கிள்ளிய மித்ரா "உன்னோட அண்ணன் ஒன்னும் இங்கே வராம இல்ல. இங்கேதான் இருக்காரு பாரு.." என்றவள் இந்த புறமாக அவளின் தலையை திருப்பி காட்டினாள்.

குறுக்காக நின்றிருந்த இன்பா மகள் கவனிப்பதை கண்டு விட்டு ஓரம் ஒதுங்கி நின்றாள்.

பக்கத்தில் இருந்த ஒரு பெட்டில் படுத்திருந்தான் மதுரன்.

கூரையை பார்த்தபடி படுத்திருந்தவனின் இரு கைகளும் நெஞ்சுக்கு நேராக கட்டியபடி இருந்தன.

"அந்த நாய் ஏன் இப்படி படுத்து இருக்கு.? கொலைகாரன் இவனையும் ஏதாவது பண்ணிட்டானா.?" குழப்பத்தோடு கேட்டாள் நீலவேணி.

மித்ரன் விஷயத்தை அவளிடம் சொன்னான். நீலவேணி அதிர்ச்சியோடு தன் வயிற்றின் மீது கையை வைத்தாள். எதையும் உணர முடியவில்லை. கட்டு மட்டும்தான் வயிற்றை சுற்றி போடப்பட்டு இருந்தது‌.

தன் அண்ணனின் திசைக்கு திரும்பியவள் "இந்த நாய் கிட்னி கொடுத்துதான் நான் உயிர் பிழைக்கணுமா.? என்னை எதுக்காக காப்பாத்தினிங்க.? அப்படியே சாக விட்டிருக்கலாமே.." என்று திட்டுவதற்கு ஆரம்பித்துவிட்டாள்.

அனைவரும் நீலவேணியை முறைத்தார்கள்.

மதுரன் திரும்பிப் பார்த்தான். "நான் ஒன்னும் உனக்கு சும்மா கிட்னி தரல. என்னோட பொண்டாட்டியையும் பிள்ளையையும் நீதான் காப்பாத்தினன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு கடன் தீர்க்கதான் என்னோட கிட்னியை தந்தேன். மத்தபடி உனக்கும் எனக்கும் நடுவுல
எப்பவும் அதே பகைதான்.." என்ற சீற்றமாக சொன்னான்.

மதுரன் சொல்வது பொய் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவன் பேசினான்.

நீலவேணி யோசித்தாள். பிறகு இந்த கொடுக்கல் வாங்கல் சரியாகதான் உள்ளது என்று முடிவெடுத்து அமைதியாகிக் கொண்டாள்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வெண்முகிலி இங்கே வந்ததும் மருமகளிடம்தான் ஓடி வந்தாள். கட்டியணைத்து கண்ணீரை வடித்தாள்.

"என் தங்க குட்டி.. உனக்கு ஏதாச்சும் ஆச்சின்னா இந்த அத்தையால தாங்கிக்கவே முடியாது. இதுக்கு மேல இது மாதிரி எங்கேயும் போய் மாட்டிக்காத.." என்று சொன்னாள்.

ஒரு சில வாரங்கள் கழிந்து விட்டன.

சோபாவில் அமர்ந்து இருந்தாள் நீலவேணி. தனது பிறந்த வீட்டில் இருந்தாள் அவள்.

அவளை கவனித்துக் கொள்ள இங்கேதான் ஆட்கள் அதிகம் என்பதால் மித்ரன் அவளை இங்கே அழைத்து வந்திருந்தான்.

அப்போதும் கூட அண்ணன் இருக்கும் இடத்திற்கு நான் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள் அவள்.

மித்ரன்தான் "எதுக்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற.? அவன் உனக்காக கிட்னி தந்திருக்கான். பழைய சண்டைகளை எல்லாம் மறந்திடு.." என்று சொன்னான்.

"நான் ஏன் சண்டையை மறக்கணும்.?" என்று இவள் ஆரம்பிக்க மனைவியை முறைத்தவன் "அப்புறம் எதுக்காக மித்ராவுக்கு வர வேண்டிய கத்தி குத்தை நீ வாங்கின.?" என்று கேட்டான்.

"உங்களுக்காக வாங்கினேன்.. உங்க தங்கச்சிக்கு ஏதாவது ஆகி இருந்தா நீங்க அழுதழுதே என் உயிரை எடுத்து இருப்பிங்க.. அதுக்கு பதிலா நானே அடிபட்டு ஹாஸ்பிட்டல கிடந்துட்டா உங்களோட கண்ணீரை பார்க்காம இருந்துடலாமேன்னு நினைச்சேன்.." என்றாள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.

அவளின் கன்னத்தைப் பிடித்து தன் புறம் திருப்பியவன் "ஈர வெங்காயம் மாதிரியே முடிவெடுத்து இருக்க.. உங்க ரெண்டு பேர்ல யாருக்கு அடிபட்டாலும் எனக்கு வலிக்கதான் செய்யும்.." என்றான்.

"அது என்னவோ உண்மைதான்.. அதுதான் அப்படி அழுதிங்களே.." என்று முனங்கியவள் "அது ஏதோ உணர்ச்சிவசத்துல எடுத்த முடிவு. குட்டி குழந்தை.. என் அண்ணனோடது.. அதனால குறுக்க பாஞ்சிட்டேன்.." என்றாள்.

"அது உணர்ச்சி வசம் கிடையாது. அது பாசம்.. மனசுக்குள்ள அடியாழத்துல புதைஞ்சி கிடக்குது உன் பாசம்.. தயவு செஞ்சி இதுக்கு மேலயும் சண்டையிலேயே உன்னோட வாழ்க்கையை தொலைக்காத.. இதை விட்டுடு.. உனக்கு கத்திக்குத்து பட்டதும் உன் அண்ணன் எப்படி மாறிப் போனான்னு உனக்கு தெரியாது. அவன் அழல. புலம்பல. எதுவுமே பண்ணல.. ஆனா மனசுக்குள்ள செத்துட்டான்.. அதை நானே பார்த்தேன்.. என்னை நம்பு.. உனக்குள்ள உன் பாசம் இருக்கு.. உன் அண்ணனுக்கும் பாசம் இருக்கு.. குட்டி குட்டி சண்டையாலயே சகோதர பாசத்தை இப்படி வெறுப்பா மாத்தி வைக்காதிங்க.." என்றவன் அவ்வளவு சொன்ன பிறகுதான் நீலவேணி இந்த வீட்டிற்கு வந்திருந்தாள்.

மதுரனுக்கு விரைவிலேயே குணமாகிவிட்டது உடம்பு. தூரத்தில் இருந்தபடி அவ்வபோது தங்கையை பார்ப்பான்.

இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் சமயங்களில் இருவருமே முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள்.

கபிலன் தன் மகனை தேடி வந்தார். மகனின் கையை பற்றியவர் "மித்ரன் எனக்கு நிறைய விஷயத்தை புரிய வச்சான். அவன் சொன்ன பிறகுதான் நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சது.. அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும்.. நீங்க இன்னைக்கு அடிச்சிப்பிங்க.. நாளைக்கு பிடிச்சிப்பிங்க‌. நான் குறுக்க வந்து உங்களுக்கு சமாதானம் செய்யதான் நினைச்சேன்.. ஆனா என்னோட நடவடிக்கையே உங்களோட சண்டையை அதிகமாக்கிடுச்சி.. தயவுசெஞ்சி என்னை நீ மன்னிச்சிடு. நீ இன்னைக்கு இப்படி மாற காரணம் நான்தான்.. நீ அன்னைக்கு கேக்கை தவறவிட்டதும் 'தெரியாம விழுந்துடுச்சி போல. விட்டுடும்மா பரவால்ல.'ன்னு நான் உன் தங்கச்சிக்கு சமாதானம் சொல்லி இருந்தா இந்த மொத்த பிரச்சனையும் வராம இருந்திருக்கும். நீ உடனே மன்னிப்பு கேட்காததை பெருசா எடுத்துக்கிட்டு உன்னை ஈகோ பிடிச்சவன்னு நான் அவகிட்ட சொன்னதாலதான் அவ உனக்கு போட்டியா எல்லாத்தையும் செய்ய ஆரம்பிச்சா.. உண்மையிலேயே இங்கே குற்றவாளி நான்தான்.." என்று வருந்தினார்.

"பரவால்ல விடுங்கப்பா.." என்ற மதுரன் தந்தை சொன்னதை தன் மனது கிரகித்துக் கொள்ளவே ஒரு வாரம் ஆகும், அதன் வரையிலும் வாயை மூடிக்கொண்டு இருத்தல் நலம் என்று புரிந்து கொண்டான்.

அவனுக்கு புரியவே இல்லை. அது எப்படி மற்ற அனைவருக்கும் சொன்ன உடனே ஒரு விஷயம் உறைக்கிறது, புரிகிறது. ஆனால் தனக்கு மட்டும் எந்த ஒரு விஷயமும் புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை.

காயம் குணமானதும் மனைவியை மருத்துவமனைக்கு செக்கப்பிற்கு அழைத்து சென்றான் மதுரன்.

அவளின் கழுத்தில் அவனது தாலி இருந்தது.

தாலியை கழட்டி வீசியது தவறுதான் என்று அவளும் ஒத்துக் கொண்டாள். சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டது தான்தான் என்று இவனும் மன்னிப்பை கேட்டு விட்டான்.

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் பரிசோதித்து சொன்னார்.
இருவரும் மகிழ்ச்சியோடு வீடு வந்தார்கள். இவர்கள் சொன்ன செய்தி கேட்டு வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் மனம் நிறைந்தது‌. நீலவேணிக்கும் கூட அந்த குழந்தையின் மீதான பாசம் தெளிவாக தெரிந்தது.

செந்தில்நாதன் கொலை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்காடி அவனை விடுவித்து விட்டார்கள் மித்ரன் அண்ட் கோவினர்.


முதல் வழக்கிலேயே வெற்றி பெற்றதால் அவர்களின் பெயரும் வெளியே பரவ ஆரம்பித்துவிட்டது.

நாட்கள் சில சென்றன.

நீலவேணி தனது புகுந்த வீட்டுக்கு வந்து விட்டாள். அவளுக்கு இங்கேதான் பிடித்திருக்கிறது என்று தெரிந்ததும் அனைவரும் இவளின் ஆசைக்கு சம்மதித்து இங்கே அனுப்பி விட்டார்கள்.

இருட்டாய் கிடக்கும் வீட்டில் இந்த அண்ணி தினமும் விளக்கு ஏற்றட்டுமே என்று நினைத்து மித்ராவும் இந்த விஷயத்தில் வாயை மூடிக் கொண்டாள்.

ஆனாலும் சனி ஞாயிறுகளில் அனைவரும் கூடினார்கள். குலாவி கொண்டார்கள்.

அன்று நீலவேணியின் பிறந்த நாள். அழகான பட்டு புடவை ஒன்றை வாங்கி வந்து தந்திருந்தான் மித்ரன். அணிந்தவள் அவனின் பார்வைக்கு தேவதையாக தென்பட்டாள்.

அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அவள் போக சொன்ன இடத்திற்கெல்லாம் போனான். அவளோடு நிறைய பேசினான். அவளின் வாயாடிதனத்தை மனதுக்குள் ரகசியமாக ரசித்தான்.

"ஐ லவ் யூ.." என்றான். அவள் திகைத்து பார்த்தபோது அவளின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தங்கள் தந்தான்.

மாலை வரையிலும் நீலவேணியும் அவனுமாக சேர்ந்து ஊரை சுற்றினார்கள். மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இருள் சூழ்ந்த வேளையில் மனைவியை அவளின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்தான் மித்ரன்.

"இங்கே எதுக்காக கூட்டி வந்திங்க.?" எனக் கேட்டவளிடம் "வந்து தெரிஞ்சிக்க.." என்று சொல்லிவிட்டு உள்ளே நடந்தான்.

வீடு இருட்டாக இருந்தது.

அப்பாவோ அனுபமாவோ தனக்கு சர்ப்ரைஸ் தரப் போகிறார்கள் என்று நினைத்திருந்தாள் இவள்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சம் தென்பட்டது.

அருகில் இருந்த அறை ஒன்றுக்குள் இருந்து கேக்கை தனது இரு கைகளிலும் ஏந்தி கொண்டு வந்தான் மதுரன்.
நீலவேணி நம்பிக்கை இல்லாமல் புருவம் உயர்த்தினாள்.

அவளின் முன்னால் வந்து நின்ற மதுரன் "சாரி.." என்றான்.

"எதுக்கு இந்த சாரி.?" என்றாள் ஒரு மாதிரி குரலில்.

"அன்னைக்கு உன்னோட கேக்கை தவறி கீழே விட்டுட்டேன். சாரி.." என்று அவன் சொல்லவும் "எத்தனை வருஷம் கழிச்சி இந்த சாரி.? எனக்கு உன்னோட சாரி ஒன்னும் தேவை கிடையாது.." என்றவள் அவன் கையில் இருந்த கேக்கை எடுத்துக் கொண்டாள்.

விளக்கை போட்டாள் மித்ரா.

மேஜையின் மீது கேக்கை வைத்து மெழுகுவர்த்தியை ஊதிய நீலவேணி அதை துண்டு போட்டாள்.

கேக்கின் முதல் துண்டை எடுத்தவள் தன் கணவனுக்கு ஊட்ட முயன்றாள்.

"எனக்கு வேணாம். உன் அண்ணனுக்கு ஊட்டு.." என்றான் அவன்.

கணவனை முறைத்துப் பார்த்தவள் "இந்த நெஞ்சை தொடுற மாதிரியான வேலையெல்லாம் செய்ய உனக்கும் உன் தங்கச்சிக்கும்தான் வரும். எங்களுக்கு வராது.." என்றவள் திகைத்து நின்றவனின் வாயில் கேக்கை வலுக்கட்டாயமாக ஊட்டினாள்.

பிறகு தந்தைக்கும் தாய்க்கும் ஊட்டி விட்டு, அண்ணிக்கும் அத்தைக்கும் அனுபமாவுக்கும் ஊட்டி விட்டு கடைசி துண்டை எடுத்துக் கொண்டு அண்ணனின் திசைக்கு திரும்பினாள்.

தலையில் பர்த்டே தொப்பியோடு நின்றிருந்தவன் இப்போது வரையிலும் கையை மெல்லமாக தட்டிக் கொண்டிருந்தான்.

"இன்னுமா பர்த்டே சாங் பாடுற.?" என கேட்டபடி கேக்கை அவன் வாய்க்கு கொண்டு சென்ற நீலவேணி தலையை அசைத்து விட்டு அவனின் கையைப் பிடித்து கேக்கை வைத்தாள்.

"நம்முடைய கெத்து நெஞ்சை நக்குற மாதிரி வசனம் பேசாம இருக்கிறதுலதான் இருக்கு.." என்று சொன்னாள்.

மதுரனுக்கும் இது ஏற்றுக்கொள்ளும்படிதான் இருந்தது.

"கரெக்டா சொன்ன.." என்றவன் தனது கையில் திணிக்கப்பட்ட கேக்கை உண்ண ஆரம்பித்தான்.

சிலரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கக் கூடாது என்பதை புரிந்து கொண்ட மற்றவர்களும் அமைதியாகிக் கொண்டார்கள்.

தொடரும்
 
  • Love
Reactions: Anu
Back
Top