Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 65 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
754
65

இரவு மணி பத்திற்கு தங்களின் வீடு திரும்பி இருந்தார்கள் மித்ரனும் நீலவேணியும்.

அவளின் அத்தனை காயங்களும் குணமாகி விட்டதாக மருத்துவர் சொல்லியிருந்தார்.

படுக்கையறைக்குள் அவள் நுழைந்ததும் அவளின் பின்னால் நுழைந்த மித்ரன் கதவினை தாழிட்டான். அவள் இரவு உடைக்கு மாற முயன்றாள். அவசரமாக ஓடி வந்து அவளின் கையை பிடித்தான்.

"இப்படியே இரு.." என்றான்‌.

"எப்படி.?" என்றவளிடம் "புடவையோடு.." என்றான்‌.

"ஏன்.?" என்றவளின் கண்களை பார்த்தவன் "எனக்கு பிடிச்சிருக்கு.." என்றான்.

புரியாமல் பார்த்தவளின் இதழ்களை பற்றினான். சிறு பயத்தோடு பூப்போலவே கையாண்டான். அவளுக்கும் அவனை பிடித்திருந்தது.

முத்தங்கள் இதழை விட்டுவிட்டு கீழே இறங்கி கழுத்தை நெருங்கிய பிறகுதான் கணவன் எதற்காக இந்த முத்தத்தை ஆரம்பித்தான் என்று புரிந்தது. வெட்கமும் பயமும் ஓடி வந்து அவளை சூழ்ந்துக் கொண்டன‌.

அவளின் வெட்கம் கண்டு மேலும் முன்னேறினான் முத்தத்தால்.

இமைகளை தாழ்த்தியவள் அவன் தன்னை கட்டிலுக்கு இழுக்கும் முன்பே விளக்கை அணைத்து விட்டாள்.

இரவிலும் அனைத்தும் புலப்பட்டது இருவருக்கும்.

உடல் கூடலில் பேர் உவகை அடைந்து ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு உறங்க முயன்றனர்.

"சாரி.." என்றான் மித்ரன் மனைவியிடம்.

"எதுக்கு.?" என்றவளிடம் "அன்னைக்கு நீ ரொம்ப ஆசையா காத்திருந்து இருப்ப‌‌.. நான் உன்னை ஏமாத்திட்டேன். சாரி. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தது. அதான் கவனிக்காம போயிட்டேன். ரியலி சாரி.." என்றான்.

"பரவால்ல விடுங்க.. ரொம்ப பயந்துட்டே இருந்தேன். நீங்க ரொம்ப நேரமா வராம போகவும் தூங்கிட்டேன்.." என்றவள் சந்தேகம் வந்து "நான் காத்திட்டு இருந்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.?" என்று கேட்டாள்.

"உன் பிரண்ட்ஸ்கிட்ட நீ அனுப்பிய மெசேஜை பார்த்தேன்.." என்று அவன் சொன்னதும் அதிர்ந்தவள் "என்னோட பிரைவசி.. உன்னை யார்ய்யா அதையெல்லாம் பார்க்க சொன்னது.?" என்று கேட்டாள்.

"பிரைவசியா.? பிரெண்ட்ஸ்ங்க நல்லா சேர்ந்து இருக்கிங்க பாரு.. எதையெல்லாம் பேசணும்ன்ற விவஸ்தையே இல்லையா உங்களுக்கு.?" என்று அவனும் திருப்பி கேட்டான்.
"விளக்கெண்ணெய் மாதிரி பேசாத... நாங்க பிரெண்ட்ஸ்.. எனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் கல்யாணம். ஏதோ ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டு தெரிஞ்சிதான் விஷயத்தை கத்துக்க முடியும்.." என்றாள்.

"ஆமா. எனக்கு மட்டும் இது எண்பதாவது கல்யாணமா.? ஆனாலும் நீங்க கொஞ்சம் டேஞ்சரான பிரண்ட்ஸ்தான்.." என்று சிரித்தபடியே சொன்னான் அவன்.

"நீயும் ரஞ்சிதாவும் பேசிக்கிட்டா அது நட்பு. நானும் என் பிரெண்ட்ஸும் பேசிக்கிட்டா அது வில்லங்கமா.?"

"ஆத்தி. ஆளை விடு. இனி நான் எதுவும் பேசல.." அமைதியாக சரணடைந்து விட்டான்.

அடுத்த இரண்டாம் வாரத்தில் கணவனை அழைத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்றாள் நீலவேணி.

"இங்கே எதுக்கு வந்து இருக்கோம்.?" என்று அவன் கேட்க "அவளுக்காகதான்.." என்று கையை நீட்டினாள் வாசலை பார்த்து.

இவனும் வாசலைப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி உள்ளே வந்தாள். இவர்கள் இருவருக்கு முன்னால் வந்து அமர்ந்தாள்.

"மீராவோட ரேப் கேஸ்ஸாலதான் நீங்க லாரன்ஸ் சாரை விட்டுட்டு வெளியே வந்திங்க‌.. ரைட்டா.?" என்று தன் கணவனிடம் கேட்டாள் நீலவேணி.

அவன் ஆம் என்று தலையசைக்கவும் "ஹலோ சார். நான் ஆராதனா.. மீரா கேஸ்ல முதல் நிலை குற்றவாளி வினய்யோட தங்கச்சி நான்.." என்று கையை நீட்டினாள்.

இவனோ கையை பற்றி குலுக்காமல் குழப்பத்தோடு தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

"இப்ப எதுக்காக நீ இங்கே என்னை கூட்டி வந்து இருக்க.? நான் இவங்க அண்ணனுக்கு சார்பாக வாதாட மாட்டேன்.." என்று மித்ரன் சொல்ல "இல்ல சார் நீங்க வாதாடணும்ன்னு நான் ஹெல்ப் கேட்க வரல. என் அண்ணனுக்கு எதிரா நான் வாதாடணும். அதுக்கு உங்களோட உதவி தேவை.. நான் என் அண்ணனுக்கு தண்டனை வாங்கி தரணும்ன்னே லா படிச்சிட்டு இருக்கேன்.." என்று சொன்னாள்.

இவன் அதிர்ச்சியோடு அவள் முகம் பார்த்தான்.

"என்ன சார் நம்ப முடியலையா.? என் அண்ணன் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. என்னோட அம்மாவும் அப்பாவும் அவன் செஞ்ச தப்பை கூட புரிஞ்சிக்காம அவனை வெளியே கொண்டு வர அத்தனை ஏற்பாட்டையும் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.. எனக்கு இந்த நாட்டோட சட்டங்கள் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு.." என்று அவள் சொல்ல, இவன் நெற்றியை சுருக்கி அவளை சந்தேகமாக பார்த்தான்.

"கண்டிப்பா நல்ல முறையிலான நம்பிக்கை கிடையாது சார். தண்டனை வந்த பிறகும் கூட இந்த கேஸ் எப்படியும் வருஷக்கணக்கா இழுத்தடிக்கும்னு தெரியும்.. மேல் முறையீடே இல்லாத அளவுக்கு என் அண்ணனுக்கு தண்டனையை வாங்கித் தரப் போறது நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.." என்று சொன்னாள் அவள்.

இப்படி ஒரு தங்கையா அவனுக்கு.? ஆச்சரியப்படுவதா அதிர்ச்சி அடைவதா என்றே தெரியவில்லை இவனுக்கு.

"உங்களோட அசிஸ்டென்டா என்னையும் சேர்த்துக்கங்க. படிப்பு நேரம் தவிர மீதி நேரத்துல உங்களோடு சேர்ந்து நானும் சட்டத்தை இன்னும் கொஞ்சம் வேகமா கத்துக்கறேன்.." என்றாள்.

மித்ரனுக்கு சரி என்று தலையாட்டுவதை தவிர வேறு வழியே இல்லை.

ஆராதனா அங்கிருந்து சென்று விட்டாள். மித்ரன் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தான்.

"இது மாதிரியான ஒரு தங்கச்சியை நான் பார்த்ததே இல்ல.." என்று அடிக்கடி சொன்னான்.

"அவளுக்கு அவங்க அண்ணன்னா ரொம்ப உயிர்.. இன்னும் சொல்லணும்ன்னா நீங்களும் மித்ராவும் எப்படியோ அப்படித்தான் அவளும் அவங்க அண்ணனும் இருந்தாங்க.. அவங்க அண்ணன் இப்படி ஒரு தப்பு செஞ்சதை இவளால ஏத்துக்கவே முடியல.. அவனுக்கு தண்டனை வாங்கி தரணும்ன்னே இவ லா காலேஜ்ல சேர்ந்தா.. என்னால அவளோட பாசத்தை புரிஞ்சிக்க முடியல.." என்றாள் நீலவேணியும்.

இருவரும் அந்த உணவகத்தை விட்டு கிளம்பினார்கள்.

அந்த உணவகத்தின் வாயிலில் ரஞ்சிதாவை பார்த்தனர் இருவரும்.

அவளின் கணவனோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தாள். இவர்களை கண்டதும் புன்னகைத்து அருகில் வந்தாள்.

நலம் விசாரித்தார்கள். பிறகு "சாப்பிடலாம் வாங்க.." என்று அழைத்தாள் ரஞ்சிதா.

"இப்பதான் சாப்பிட்டோம்.." என்று சொன்ன மித்ரன் இருவரையும் யோசனையோடு பார்த்தபடி அங்கிருந்து கிளம்ப முயன்றான்.

"மித்ரன் ஒரு நிமிஷம்.." அழைத்து நிறுத்தினாள் ரஞ்சிதா.

"ரொம்ப நாள் முன்னாடி நீங்க ஒரு கேள்வி கேட்டிங்க. எனக்கு அப்ப பதில் சொல்ல முடியல. இன்னைக்கு முழுசா உணர்ந்து சொல்றேன் இதை.." என்று சொன்னவளை குழப்பத்தோடு பார்த்தான் மித்ரன்.

"ஒரு பாசமான அண்ணன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் நம்மளோட சகோதர உறவை தக்க வச்சிக்க முடியும்ன்னு நீங்களும் நானும் நம்பிகிட்டு இருந்தோம். ஆனா அது உண்மையிலேயே பொய்.." என்று அவள் சொல்லவும் இவனின் ஆச்சரியம் கூடியது.

"நானும் என் தம்பியும் ஒரே காம்பவுண்ட்க்குள்ளதான் இருக்கோம். எங்களோட உறவு நல்லபடியா போய்கிட்டு இருக்கு. அதுக்கு காரணம் இன்னொரு சகோதர சகோதரி கிடையாது.. எங்களோட காதல்தான்.. இவர் என்னோட சகோதர பாசத்தை புரிஞ்சிகிட்டாரு.. ரஞ்சித்தோட பொண்டாட்டியும் அவனோட சகோதர பாசத்தை புரிஞ்சிக்கிட்டா. புரிதல்தான் இங்கே முக்கியம். வேறு எதுவும் கிடையாது.." என்று சொன்னாள்.

"வாழ்த்துக்கள்.." என்று சொல்லிவிட்டு மித்ரன் மனைவியோடு புறப்பட்டான்.

புரிதல்தான் விஷயம். ஆனால் அந்த புரிதலுக்கும் கூட பாசம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்க வேண்டுமே என்று மனதுக்குள் குறுக்கு கேள்வி கேட்டான் .

தன் அருகில் நடந்து வந்த மனைவியை கவனித்தான். உலகத்திலேயே மிகவும் சந்தோஷமானவள் அவள்தான் என்பது போல இருந்தாள் அவள்.

தமிழ் இலக்கியத்தை விட்டுவிட்டு பிசினஸ் மேனேஜ்மென்டில் சேர இருக்கிறாள் இவள்.

மதுரன் இப்போதும் கூட வந்து "பிசினஸ் மேனேஜ்மென்ட் கஷ்டமானது. உன்னால் படிக்க முடியாது.." என்று தங்கையிடம் சொல்லி இருந்தான்.

அன்றைக்கும் சண்டை வந்து இருவரும் குடுமியை பிடிக்காத குறை.

"நான் என்னவோ படிக்கிறேன். என் இஷ்டம்.. நீ ஓடிப் போடா.." என்று சொல்லிவிட்டாள் இவள்.

"அவளோட படிப்பு விஷயத்துல நீங்க ஏன் குறுக்கிடுறிங்க.?" என்று மித்ராவும் தன் கணவனை பிடித்து திட்டி வைத்தாள்.

நாட்கள் ஓடியதில் எப்படியோ நீலவேணி ஆசைப்பட்டது போலவே கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.

மித்ரனும் தனது பணியில் சிறப்பாக செயல்பட்டான்.

நீலவேணி படிப்பை முடிக்கும் முன்பு தன் கையில் இருக்கும் பிசினஸை பல மடங்காக மாற்றி தனது பங்கை பிரித்து கொண்டு சென்று விட வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருந்தான் மதுரன்.

ஏனெனில் அவனுக்கு தன் தங்கையின் மீது நம்பிக்கை இல்லை. அலுவலகம் அவளின் கைக்கு சென்றால் பிறகு நட்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்து விடும் என்று நினைத்தான்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது.

மித்ரா மதுரன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மித்ரன் சந்தோஷ வானில் பறந்தான்.

நீலவேணியும் குழந்தையை பார்த்துவிட்டு "நல்ல வேளை குழந்தை என்னை மாதிரி இருக்கு.. அந்த நாயை மாதிரி இருந்திருந்தா பார்க்கவே படு பயங்கரமா இருந்திருக்கும்.." என்று சொன்னாள்.
"உன்கிட்ட யாரு இப்ப இதை பத்தி கேட்டாங்க.?" என்று மனைவியை அடக்கினான் மித்ரன்.

வருடங்கள் ஓடியது. மித்ரனுக்கும் நீலவேணிக்கும் பெண் குழந்தை பிறந்தது.

***

அன்று மீராவின் வழக்கு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தது. வரலாற்றில் முதன் முதலாய் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த வழக்கையும் மேல் முறையீடு செய்து சில ஆண்டுகளை ஓட்டி விட்டார்கள்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட நீதிமன்றம் வந்தார் லாரன்ஸ்.

மித்ரனை நீதிமன்ற வளாகத்தில் பார்த்தவர் "எனக்கு எதிரா நீ வழக்காட போறியா.?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

"நான் இல்ல சார்.." என்று சொன்னவன் வாசலை நோக்கி கையை காட்டினான். கருப்பு கோட்டை அணிந்து கொண்டு வளாகத்தினுள் நடந்து வந்தாள் ஆராதனா.

"புது பொண்ணா இருக்கு. இவ எனக்கு எதிரா வாதாட போறாளா.? ரொம்பதான் கனவு காணுற.." என்று சொல்லிவிட்டு கேலி சிரிப்போடு கோர்ட்டுக்குள் நுழைந்தார் அவர்.

இன்று நிச்சயம் விடுதலை என்ற நம்பிக்கையோடு நீதிமன்றம் வந்துச் சேர்ந்தான் வினய்.

வாசலில் கருப்பு கோட்டை அணிந்தபடி ஆராதனா நின்றிருந்தாள்.

"ஆரு!" வினய்யின் அப்பா குழப்பத்தோடு மகளைப் பார்த்தார்.

"நான் உங்க மகனுக்கு எதிரா வழக்காட வந்திருக்கும் வக்கீல். குற்றவாளிக்கு விடுதலை கிடைக்க கூடாதுன்னு வழக்காட வந்திருக்கேன். நீங்க உங்க பங்கு பாசத்தை கோர்ட்டுக்கு வெளியே வச்சிக்கலாம்!" என்றாள் ஆராதனா.

வினய்யின் கண்களில் உயிரே இல்லை.

"ஆரு!" என்றான் பயத்தோடு.

"சாரி அண்ணா.. ஐ லவ் யூ! ஆனா நீ பண்ணது தப்பு. ரொம்ப பெரிய தப்பு. அந்த இடத்துல மீராவுக்கு பதிலா நான் இருந்ததாதான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன்!"

"ஆரூ!" அதிர்ச்சியில் கத்தினான்.

ஆராதனா கண்களில் வன்மத்தை மறைக்காமல் அவனை நெருங்கினாள்.

"ஒரு நல்ல ஆண் மகன் காதலி, மனைவி, ப்ராஸ்டியூட் தவிர வேற பெண்களை தொட மாட்டான். ஆனா நீ உன்னோடு பிரெண்டா நினைச்சி பழகியவளை ரேப்
பண்ணியிருக்க. அவளை தொட்ட நீ என்னை தொட மாட்டன்னு என்ன நிச்சயம்?" என்றவளை தன் பக்கம் திருப்பி அவளின் கன்னத்தில் அறைந்தாள் அவளின் அம்மா.

"என்னடி பேசுற? இவன் உன் அண்ணன்!" என்றாள் ஆத்திரத்தோடு.

ஆராதனா தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"ஓ.. அண்ணனா இருந்தா தொட மாட்டானா? இவன் உண்மையிலேயே என்னை நேசிச்சானா?"

"ஆரூ!" வினய்யின் குரல் சத்தமாக வெளிவர மறுத்தது.

திரும்பியவள் "ஒரு பொண்ணை உண்மையா லவ் பண்றவன் இன்னொரு பெண்ணை அவ சம்மதம் இல்லாம தொட மாட்டான். அந்த லவ் பண்ற பொண்ணு காதலியாவோ அம்மாவாவோ தங்கச்சியாவோ இருந்தாலும் கூட இதேதான் விதி. ஆனா நீ உண்மையிலேயே அம்மாவையோ இல்ல என்னையோ நேசிச்சி இருந்தா அவளை அவ விருப்பம் இல்லாம தொட்டிருப்பியா?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

வினய் இடம் வலமாக தலையசைத்தான். பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. அவன் ஆராதனாவை அதிகம் நேசித்தான்.

தொடரும்
 
  • Like
Reactions: Anu
Back
Top