Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசியே‌ 66 (இறுதி அத்தியாயம்) | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

இளவரசியே‌ 66 (இறுதி அத்தியாயம்)

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
754
66

வினய் கலங்கும் விழிகளோடு தங்கையை பார்த்தான்.

"நீ உன் தப்பை உணரதான் இந்த தண்டனை. ஆனா அதையே மறுக்கற.. உன் தப்பையும் மறுக்கற.. அப்படின்னா உன் தப்பை நீ உணரலன்னுதான் அர்த்தம். நீ வந்து வீட்டுல இருந்தா நான் எப்படி நிம்மதியா தூங்க முடியும்? மீரா உன் தோழி. உன் மேல நம்பிக்கை வச்சா. அவளையே நொடியில சிதைச்சிட்ட.. நானெல்லாம் உனக்கு எம்மாத்திரம்? எனக்கு நினைச்சாவே பயமா இருக்கு! இதோ உன்னை பெத்திருக்காங்களே.. இரண்டு பேரும்.. இவங்களுக்கு தன் பொண்ணுன்னா ஒரு விதி. யாரோ பெத்த பொண்ணுன்னா வேற விதி. இவங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கு நீ மேல் முறையீடுன்னு வந்திருக்க மாட்ட! இந்த கேஸ் வழக்கமான கேஸை போல இழுத்தடிக்கும்ன்னு நினைச்சேன். ஆனாலும் உனக்கு தண்டனை வாங்கி தரது நானா இருக்கணும்ன்னே நான் ஆசைப்பட்ட படிப்பை விட்டுட்டு சட்டம் படிச்சேன். என் கோபம் பத்தி உனக்கு நல்லா தெரியும். இந்த கேஸ்ல நான் தோத்துட்டா இதே கோர்ட் வாசல்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கிட்டு செத்து போவேன். நீ உன் தப்பை உணர நான் என்ன வேணாலும் செய்வேன். என்னை பத்தி உனக்கு ரொம்ப நல்லா தெரியும்!" என்றவள் தன் பெற்றோரை முறைத்து விட்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள்.

வினய் அசையாமல் நின்றிருந்தான்.

"அவ கிடக்கறா விடு!" என்று சமாதானம் சொல்ல முயன்றார் அப்பா.

மறுப்பாக தலையசைத்தவன் அமைதியாக உள்ளே நடந்தான்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது‌.

"மீராவை ரேப் பண்ணது நான்தான்.!" என்று தங்கை கேள்வியை கேட்கும் முன்பே சொன்னான் வினய். உடன் நின்ற மற்றொரு குற்றவாளியான சாரதி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான். வினய்யின் அப்பாவும் அம்மாவும் மகனை குழப்பத்தோடுப் பார்த்தார்கள்.

"நான்தான் செஞ்சேன்.. எனக்கு இன்னும் அதிகமான தண்டனை கொடுங்க.. ப்ளீஸ்!" என்று குலுங்கி அழுதான். மகனின் அழுகையை முதல் முறையாக கண்டு அவனின் தாயும் தந்தையும் அதிர்ந்து நின்றனர்.

ஆராதனா இன்னமும் வன்மம் குறையாமல் நின்றிருத்தாள்.

சாரதியை பார்த்தார் நீதிபதி. அவன் திருதிருவென்று விழித்தான். அவர்கள் சார்பாக வாதாட இருந்த வக்கீல் லாரன்ஸ் குழம்பி போனார்.

வினய்யின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு அவனுக்கு பழைய தண்டனையே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. சாரதியின் வழக்கு தனி வழக்காக பதிவு செய்யப்பட்டு ஒத்திப் போடப்பட்டது.

வினய் ஜீப்பில் ஏறும் முன் அவனின் முன்னால் வந்து நின்றாள் ஆராதனா‌.

"சாரி!" என்றான் தலையை குனிந்தபடி.

ஆராதனா தலையசைத்தாள்.

"ப்ளீஸ்.. இனியாவது நீ ஆசைப்பட்டது படி.!"

மீண்டும் தலையசைத்தாள்.

"சாரி.. ஏஜ் முடிஞ்சிடுச்சி. இனி முடியாது. பரவால்ல விடு. நீ சின்ன வயசுல இருந்து என்ன தப்பு பண்ணாலும் நானும் சேர்ந்துதானே தண்டனை அனுபவிச்சிருக்கேன். இதுவும் அதுல ஒன்னா இருந்துட்டு போகட்டும்.!" என்றாள்.

வினய்யின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் ஆரூ.. சத்தியமா நான் வெளியே வர ஸ்டெப் எடுத்திருக்க மாட்டேன்!"

அலட்சியமாக உதடு வளைத்தாள்.

"அதெல்லாம் சும்மா.. நான் சொன்னா நீ கேட்டிருக்க மாட்ட‌.. இப்ப இருப்பது போல அப்ப உனக்கு உறைச்சிருக்காது. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். பதினாலு வயசுல நான் ஏஜ் அட்டென்ட் பண்ணும் வரை உன்னை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கியிருக்கேன். நீ மீராவை அப்படி செஞ்ச நாளுக்கும் முன்னால் நாள் வரை உன் எச்சில் தட்டுல சாப்பாடு அள்ளி சாப்பிட்டுருக்கேன். உன்னை திட்டிக்கிட்டே உனக்கு எண்ணெய் தேய்ச்சி முதுகும் கூட தேய்ச்சி விட்டிருக்கேன். எனக்கு தேவையான இன்னர்வேர்ஸை நீதான் வாங்கிட்டு வந்து தந்திருக்க.. ஒவ்வொரு மாசமும் சானிடரி பேட்ஸ் வாங்கிட்டு வந்து தந்திருக்க.. நீ எனக்கு செகண்ட் ஃபாதர் மாதிரி இருந்திருக்க.. என்னை உன் செகண்ட் மதர் மாதிரியும் உன் பர்ஸ்ட் டாட்டர் மாதிரியும் நடத்தியிருக்க.. ஆனா அத்தனையும் உடைச்சிட்ட.. என் நெஞ்சில எரியற நெருப்பு எந்த அளவுன்னு உனக்கு தெரியாது. உன் முழு தண்டனையும் முடிஞ்சி நீ வெளிவரும்போது என்னோட பழைய அண்ணனா வருவன்னு நம்பி கிளம்பறேன். என்னை மறுபடியும் உடைச்சிடாத.. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!" என்றவள் அருகில் இருந்த ஸ்கூட்டியில் ஏறி கிளம்பினாள்.

வினய் இப்படி ஒரு திருப்பம் வருமென்று எதிர்பார்க்கவே இல்லை. தான் வெளிவராமல் போனது அவன் மனதில் இல்லவே இல்லை‌. ஆராதனா ஆசைப்பட்டது படிக்க முடியாமல் போனதை எண்ணி அதிகம் உடைந்துப் போனான். 'நான் பண்ண தப்பை தப்புன்னு சொல்லி அம்மா திட்டியிருந்தா இப்படி ஒரு நிலமை வந்திருக்காது. அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணாம விட்டிருந்தா ஆராதனா லைஃப்பை கோட்டை விட்டிருக்க மாட்டா.. அம்மா.. நீ உன் முட்டாள்தனமான பாசத்தால அவளையும் சேர்ந்து இழந்துட்டேன்!' என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அந்த அண்ணன் தங்கையை பார்த்துக் கொண்டிருந்த மித்ரனுக்கு மேனி சிலிர்த்தது.

அவன் அறிந்த அண்ணன் தங்கைகளில் இவர்கள் ஒரு மாதிரியாக தென்பட்டார்கள். கபிலனும் வெண்முகிலியும் ஒரு சிறந்த அண்ணன் தங்கை என்றால் மித்ரனும் மித்ராவும் வேறு ஒரு வகையினர். வினய்யும் ஆராதனாவும் மற்றொரு வகையினர்.

இன்னும் சில வருடங்களுக்கு பிறகு..

அன்று தனது சட்ட அலுவலகத்தை திறக்க இருந்தான் மித்ரன். கொஞ்சம் பெரிதாகவே கட்டப்பட்டு இருந்த அலுவலகம் அது.

அனைவரும் அலுவலக திறப்பு நாளில் அங்கே கூடியிருந்தார்கள். மித்ராவும் மதுரனும் ஆதர்ச தம்பதிகளாக இருந்தார்கள். மித்ரனும் நீலவேணியும் அதிக குறும்புகளும் விளையாட்டுத்தனங்களை கொண்ட ஒரு அழகான தம்பதிகளாக இருந்தார்கள்.

அலுவலகத்தின் முன்னால் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.

"இப்படி ஒரு ஆபீஸ் ஓபன் பண்ணும் போது என் கையாலதான் ஓபன் பண்ணணும்ன்னு என் அண்ணன் ஆசைப்பட்டு காத்து இருந்தான்.." என்று சொன்னாள் மித்ரா.

நீலவேணி தன் அண்ணியை எடை போட்டாள்.

"அதெல்லாம் அப்ப. இப்ப அவரோட முக்கியத்துவம் எனக்குத்தான்.. என்னைதான் ஓபன் பண்ண கூப்பிடுவாரு.." என்று ஒரு விதமான நம்பிக்கையோடு சொன்னாள்.

மித்ராவும் நீலவேணியும் ஒருவரை ஒருவர் பார்த்து கழுத்தை வெட்டிக்கொண்டு மறுபுறமாக திரும்பினார்கள்.
அலங்கரிக்கப்பட்ட தட்டில் ரிப்பன் கட்டிய கத்தரிக்கோல் கொண்டுவரப்பட்டது. மித்ரன் முன்னால் வந்து நின்றான்.

"அண்ணா நான்தானே.?" என்று அவசரமாக கேட்டாள் மித்ரா.

"இல்லைங்க.. என்னைதானே.?" என்று இடைப்புகுந்து கேட்டாள் நீலவேணி.

"என்ன சொல்றிங்க ரெண்டு பேரும்.?" புரியாமல் கேட்டான் அவன்.

"இந்த ரிப்பனை நான்தானே வெட்டணும்.?" என்று இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

"உன் கண்ணு நான்தானே.?" என்று மீண்டும் கேட்டார்கள்.

இருவரையும் மாறி மாறி பார்த்தவன் "எனக்கு ஒன்னும் கண்ணு தேவையில்ல.." என்று சொல்லிவிட்டு தன் காலடியில் நின்றிருந்த தன் மகளை கையில் தூக்கினான்.

"என் அம்மா. என் சாமி. என் உயிர். இவதான் என்னோட ஆபிஸை திறந்து வைக்கணும்.." என்று தங்கையிடமும் மனைவியிடமும் சொன்னவன் மகளின் கையில் கத்திரிக்கோலை தந்தான்.

மகள் ரிப்பனை வெட்டியதும் உள்ளே நடந்தான் அவன். மித்ராவும் நீலவேணியும் உதட்டை பிதுக்கியபடி ஒருவரின் முகம் ஒருவர் பார்த்தார்கள்.

இருவரின் காதுகளையும் பிடித்து திருகினான் அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்ற மதுரன்.

"மனைவி முக்கியமா தங்கச்சி முக்கியமான்னு கேட்டு சும்மா இம்சை பண்ணாதிங்க. ஆம்பளை ஜென்மமே பாவம். எல்லாமே சில காலம்தான். ஒரு சில நேரத்துல தங்கச்சிதான் உயிர். அதே போல் மனைவியை பிரசவ வார்டுக்குள்ள அனுப்பிட்டு அந்த இடத்திலும் தங்கச்சிதான் உயிர்ன்னு எந்த புருஷனாலும் சொல்ல முடியாது. அதேபோல கூடவே பிறந்து வளர்ந்த தங்கச்சியை மனைவிக்காக விட்டு தரவும் முடியாது. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் நம்முடைய மனநிலையை கட்டமைக்கிறது. கோபத்திலும் பதட்டமான இடத்திலும் நிலை தடுமாறாம நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு முடிவு எடுத்தாலே எல்லா உறவையும் தக்க வச்சிக்க முடியும்.." என்று சொன்னான் மதுரன்.

தன் காதில் இருந்த அண்ணனின் கையை தட்டி விட்டு விட்டு கைகளை கட்டிக்கொண்டு அண்ணனின் முகம் பார்த்த நீலவேணி "இதையெல்லாம் யார் சொல்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிடுச்சி.." என்று கிண்டல் அடித்தாள்.

தங்கையை தோளோடு அணைத்துக் கொண்ட மதுரன் "நெஞ்சை தொடுற மாதிரி வசனம் பேசினா எப்படி இருக்கும்ன்னு சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன். நான் பேசினா கண்றாவியாதான் இருக்கு. நமக்கு இது தேவையில்ல.." என்றவன் நினைவு வந்தவனாக அவளை விட்டு விலகி நின்றான்.
"என்ன வெங்காயத்துக்கு நீ அந்த ஜிகே குரூப்போட பிசினஸ் ஒப்பந்தம் போட்டு இருக்க.?" என்று தங்கையிடம் கோபத்தோடு கேட்டான்.

"பிசினஸ் முன்னேறணும்ன்னா அந்த குரூப்போடு ஒப்பந்தம் போட்டுக்கிட்டா நல்லதுன்னு தோணுச்சி. அதனாலதான் போட்டேன். இப்ப உனக்கு என்ன வந்தது.?" என்று கேட்டாள்.

"லூசு மாதிரி முடிவு எடுத்திருக்க நீ. கண்டிப்பா உன் முடிவு ஊத்திக்க போகுது.." என்று சொன்னான்.

எகிறி நின்று அண்ணனின் தலையில் கொட்டியவள் "ஆரம்பிக்கும் முன்னாடியே வாயை வைக்கிறியா சனியனே.? இந்த டீலிங் முடிஞ்சி கம்பெனி ஓஹோன்னு வளரும்போது உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்டா.. அன்னைக்கு தெரியும் இந்த நீலவேணியோட திறமை என்னன்னு உனக்கு.." என்று கர்வமாக உரைத்தாள் அவள்.

"இப்ப இரண்டு பேரும் அமைதியா உள்ளே வரிங்களா இல்லையா.?" என்று அலுவலகத்தில் உள்ளே இருந்து அழைத்தாள் மித்ரா.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு உள்ளே நடந்தார்கள்.

ஹாலில் இருந்த குத்து விளக்கை பெண்கள் இருவரும் ஏற்றினார்கள்.

மித்ராவின் மறதி வியாதி முழுமையாக குணமாகி விட்டிருந்தது இந்த சில வருடங்களில்.

வாழ்க்கையில் பல இடத்தில் பல உறவுகள் கணக்காகவே இருந்தன. அன்பை செலுத்தினால் அதே அன்பை தந்தார்கள். பழியுணர்ச்சியை தந்தால் அதே பழியுணர்ச்சியால் உண்டான வன்மத்தை கொட்டினார்கள் என்பதை புரிந்துக் கொண்ட நீலவேணி இப்போதெல்லாம் முடிந்த அளவுக்கு தன் அண்ணனிடம் பெரிய சண்டை போடாமல் இருந்தாள். ஆனால் சின்ன சண்டை முவ்வேளை உணவு போலவே இருந்தது.

அனுபமா அந்த அலுவலகத்திலிருந்த இளைஞன் ஒருவனை கண்டுவிட்டு பார்வையில் ஏதோ ஒன்றை உணர்ந்தாள். தனக்கானவன் இவன்தானோ என்று யோசித்தாள். அவனைப் பற்றி விவரங்களை அறிந்து கொள்ள சென்றாள்.

அலுவலகத்தின் திறப்பு விழா முடிந்ததும் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.

நல்லதங்காள் கோவிலின் முன்பு நின்றது வாகனம்.

அனைவரும் இறங்கி சென்றார்கள். கோவிலில் இருந்த நல்லதங்காளை வணங்கினார்கள்.

தனது தங்கை உயிரோடு பிழைத்து வந்து விட்டால் வருடத்திற்கு இருமுறை கோவிலுக்கு வந்து வணங்கி செல்வதாக வேண்டியிருந்தான் மதுரன்.

அவன் இந்த வேண்டுதலை பற்றி சொன்னபோது ஒருவருமே நம்பவில்லை. ஏதோ ஒரு எண்ணம் அவனுக்குள். தங்கை கவலைக்கிடம் என்று விஷயம் அறிந்ததும் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனதில் தோன்றியிருந்த வேண்டுதலை வைத்து விட்டான்.

மித்ரன் மித்ரா ஒருபுறமும் நீலவேணியும் மதுரனும் ஒருபுறமும் கபிலன் வெண்முகிலி ஒருபுறமும் நின்று சாமியை வணங்கினார்கள்.

"எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை வரட்டும் சாமி. ஆனா நானும் என் தங்கச்சியும் (அண்ணனும்) பிரியாம இருந்து சண்டை போடணும்.." என்று வேண்டிக் கொண்டார்கள் நீலவேணியும் மதுரனும்.

"எங்களுக்குள்ள எந்த சண்டையும் வரக்கூடாது. பிரிவும் வரக்கூடாது சாமி.." என்று வேண்டிக் கொண்டார்கள் மித்ரனும் மித்ராவும்.

"என் அண்ணனுக்கு அத்தனை மகிழ்ச்சியையும் கொடு சாமி.." என்று வேண்டிக் கொண்டாள் வெண்முகிலி.

"என் தங்கச்சிக்கு அத்தனை சந்தோஷத்தையும் கொடு சாமி.." என்று வேண்டிக் கொண்டார் கபிலன்.

முற்றும்.
 
  • Love
Reactions: Anu
Wowwwwww last ah koodaaa sis bro vaah ninnu saami kumbidura concept semma pongaaa.... Final ahhh anupama ku oru aala vera kaatitinga pola.... Super ending siss.... Waiting for new story.....
 
Back
Top