Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] டிராகனின் கன்னிகை 8 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

SiteAdmin

Administrator
Staff member
Joined
Mar 18, 2025
Messages
33
8

தோட்டத்திற்குள் புகுந்து ஓடினாள் அதரா. திடீரென்று அந்த திசையிலும் அவளின் முன்னால் வந்து நின்றது டிராகன்.

அவள் பயந்து வேறொரு திசையில் ஓட முயல, டிராகன் நெருப்பை கக்கியது.

இவள் நடுக்கத்தோடு நின்று விட்டாள். அவளை சுற்றி நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி வைத்து விட்டது அந்த டிராகன்.

தரையில் சுற்றி எரிந்த நெருப்பை பார்த்தவள் டிராகனையும் பயத்தோடு பார்த்தாள்.

நெருப்பு வளையத்தின் வெளியே நின்றிருந்த அந்த டிராகன் "நான் கடவுள்.." என்றது.

"என்னை கொல்ல போறியா?" எனக் கேட்டாள் இவள்.

"இல்ல.." என்று தலையாட்டிய டிராகன் "உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லு. அதை நான் கொண்டு வரேன்.." என்றது.

"சுதந்திரம் வேணும். இந்த நெருப்பை அணை. எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல. அதிலும் அந்த இளவரசனை சுத்தமா பிடிக்கல.." என்று கத்தாத குறையாக சொன்னாள்.

"ஆனா இளவரசனை அடைய பெண்கள் விரும்புவாங்க.." என்றது டிராகன்.

"சரி நான் பொண்ணு இல்ல பையன்னு நினைச்சிக்க.."

டிராகன் "ஹிஹிஹி.." என்று சிரித்தது.

"ரொம்ப கேவலமா சிரிக்கிற.." என்றவள் "என்னை போக விடு.." என்று சிணுங்கினாள்.

அவள் சிணுங்கலில் டிராகனுக்கு அதன் இதயம் ரப்பர் பந்தாக எகிறி குதித்தது.

"நீ ரொம்ப க்யூட்டா இருக்க.." என்றது.

"பட் நீ ஜெயன்டிக்கா அக்லியா இருக்க.. என்னை வெளியே விட்டா நான் உன்னை ப்யூட்டிபுல் கிரியேச்சர்ன்னு ஒத்துப்பேன்.." என்றாள்.

டிராகன் மீண்டும் சிரித்தது. "ஒரு முத்தம் கொடுத்தா விடுறேன்.." என்றது.

இவள் முகத்தை சுளித்தாள். ஒரு அழகான பூந்தோட்டம் நெருப்பால் நாசமாகுகிறதே என்று கவலைப்பட்டவள் ஒரு முத்தம் தந்தால் நம் நாட்டுக்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையில் "சரி.." என்றாள்.

டிராகன் தன் கழுத்தை முன்னால் நீட்டியது. எரிந்த நெருப்பு டிராகனை எதுவும் செய்யவில்லை. அதையும் கவனித்தாள்.

நெருங்கிய டிராகனின் மூச்சுக்காற்று இவள் முகத்தில் மோதியது. சாம்பல் வாசம் வீசியது அந்த டிராகன்.

"நெருக்கத்துல பார்க்கும்போது நீ ரொம்ப பயங்கரமா இருக்க. நான் கண் மூடிதான் கிஸ் பண்ணுவேன்.." என்றாள்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி.." என்றது டிராகன்.

டிராகனின் மேல் உதட்டின் மீது கை வைத்தாள். டிராகனுக்கு உணர்வுகள் நெகிழ்ந்தது.

"நீ வாயை திறக்க கூடாது.." என்று எச்சரித்து விட்டு கண்களை மூடினாள். தான் கை வைத்த இடத்தின் அருகில் முத்தமிட்டாள்.

டிராகனுக்கு மனிதனாக மாறி அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ஒரேயொரு முத்தம். அந்த டிராகனுக்கு தன் மேனியில் பூக்கள் பூத்தது போல் இருந்தது‌ சிறகின் நீளம் நூறு மடங்கு வளர்ந்தது போல் இருந்தது. சுற்றி இருந்த செடிகள் அனைத்தும் வாசனைகளை துப்பின.

முத்தமிட்டவள் விலகி கொண்டாள். கண்களை திறந்து பார்த்தாள். டிராகனும் கண் மூடி இருந்தது. இவள் விலகிய பிறகு திறந்தது.

நீலத்திற்கும் கருப்புக்கும் மாறி மாறி மின்னியது அதன் விழிகள்.

"நான்தான் கிஸ் பண்ணிட்டேனே! என்னை கொண்டுப் போய் என் நாட்டுல விடு.." என்றாள்.

டிராகன் நெருப்பு வளையத்தில் காலை வைத்து தேய்த்தது. மூன்றடி அகலத்திற்கு பாதை உருவானது.

வெளியே வந்த அதரா "என்னை கூட்டி போ.." என்றாள்.

"இந்த நெருப்பு வளையத்தை விட்டுதான் வெளியே விடுறேன்னு சொன்னேன். இந்த கோட்டையை விட்டு இல்ல.." என்ற டிராகன் "வந்த வழியே திரும்பி போ. இல்லன்னா நான் உன்னை கடிச்சி வச்சிடுவேன்.." என்று மிரட்டியது.

"இந்த கோட்டையில் எல்லாரும் பிராடாவே இருக்காங்க.." என்று முனகியபடி சென்றாள் இவள்.

தோல்வியை பிடிக்கவேயில்லை.

அவள் கால் வலிக்க நடந்து கோட்டைக்கு திரும்பி வந்தபோது அங்கே கோட்டை வாசலில் தீயொளி காத்திருந்தான்.

"போய் சுத்திட்டு வந்துட்டியா? சுதந்திரம் எப்படி இருக்கு?" என்று கேட்டான் கையை கட்டியபடி.

"ஹேர் மாதிரி இருக்கு.." என்றவள் "என்னை ஜெயிலுக்கு அனுப்ப போறியா? நான் எந்த தப்பும் செய்யல.." என்றாள்.

"உள்ளே வா.." என்றவன் முன்னால் நடந்தான்.

கோட்டைக்குள் நுழைந்தவள் "கடவுள்ன்னு ஒருத்தர் இல்லவே இல்ல.." என்றாள்.

"ஏன்?" ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டான்.

"நான் தப்பே பண்ணல. அப்புறம் நான் ஏன் இங்கே இருக்கணும்? கடவுள் இருந்திருந்தா என்னை வந்து காப்பாத்தி கூட்டி போயிருப்பாரு இல்லையா?"

இவன் அவளின் யோசனையை பாராட்டினான்.

"ஆனா நீ ரொம்ப நாத்திகம் பேசுற.." என்றான்.

"நியாயமான கேள்வி கேட்கிறேன்.." என்றவள் "இங்கே கோர்ட் எங்கே இருக்கு? நான் யார்கிட்ட என் வாழ்க்கை பத்தி பேசுவது?" என்று கேட்டாள்.

"நான்தான் உன் ஒரே கடவுள். நான்தான் உன் ஒரே ஜட்ஜ். உனக்கான சட்டத்தை நான்தான் உருவாக்குவேன்.." என்றான்.

அவர்கள் பெரிய ஹால் ஒன்றில் நடந்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கு கால் வலித்தது.

"நீ எனக்கு ஒரு கிஸ் தந்தா உனக்கு ஒரு வேளை சாப்பாடு தருவேன். நீ ஒருநாள் என்னோடு பெட்ல இருந்தா நான் உன்னை ஒருநாள் என் ரூம்ல சுதந்திரமா தங்க விடுவேன்.." என்றான்.

"என் ஜெயிலுக்கு போகும் வழி சொல்லு. சாப்பாட்டு டைம் ஆச்சி. நான் போய் சாப்பிடுறேன்.." என்றாள்.

நடந்தவளின் கையை பிடித்து நிறுத்தினான். "என்னை கிஸ் பண்ண மாட்டியா?" எனக் கேட்டான்.

"ஏன் பண்ணணும்?"

குழம்பியவன் "டிராகனுக்கு தந்தியே!" என்றான்.

"அது மிருகம்.." என்றாள் இவள் சாதாரணமாக.

"நான் ஒரு மிருகத்தை விட கேவலமா?" இவன் அதே குழப்பத்தோடு கேட்க, "மிருகத்துக்கு கிஸ் பண்ணா அது என்னை ரேப் பண்ணுமா? இல்லையே. பட் மனிதன் அப்படி அல்ல. மிருகத்தை விட மோசம். ஒரு மனிதன் கையால் மரணிப்பதை விட மிருகத்தின் கையால் மரணிக்கலாம்ன்னு சொல்வேன் நான்.." என்றாள்.

"உன்னை புரிஞ்சிக்கவே முடியல.." என்றவனிடம் "சக மனிதன் மேல அவ்வளவா நம்பிக்கை இல்லன்னு சொல்றேன்.." என்றாள்.

அவளை ஒரு அறைக்கு அழைத்து வந்தான்.

கதவை திறந்தான்.

"இது ஜெயில் இல்லையே!" என்றாள்.

"இனி நீ இங்கே தங்கிக்க.." என்றான் தீயொளி.

திறந்திருந்த கதவின் மீது சாய்ந்தவள் "லஞ்சமா என்ன கேட்க போற?" எனக் கேட்டாள்.

"கேட்பதை தர உனக்கு மனசு இல்ல. அதனால எதுவும் தர வேணாம். இனி நீ எங்க விருந்தாளி.." என்றான்.

"நன்றி.." என்றவள் கைகளை கட்டியபடி உள்ளே நடந்தாள். காலால் கதவை தள்ளி சாத்தினாள்.

***

சிவப்பு டிராகன் நாட்டில்..

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டத்திற்குள் நின்றிருந்தான் வில்வா. திருமண மேடை அவனுக்கு முன்னால் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இளம்பெண் ஒருத்தி இவனுக்காக காத்திருந்தாள்‌. அவசரத்திற்கு மனித சந்தையில் இருந்து அவளை வாங்கி வந்திருந்தான்.

ஆனால் ஞாபகத்தில் அதரா வந்து நின்றாள். அவள் கிடைத்திருந்தால் திருமணத்தை முழுமனதாக செய்திருப்பானோ என்னவோ?

மேடையை நோக்கி நடந்தான்.

திடீரென்று வானில் நீல டிராகன் என்று பறந்து வந்தது. நொடியில் திருமண மேடையில் வந்து இறங்கியது. அதன் கால் மிதித்ததில் மணப்பெண் இறந்து போனாள்.

சுற்றி இருந்த கூட்டம் அதிர்ந்தது. சிலர் தங்களின் துப்பாக்கிகளை கையில் எடுத்தார்கள்.

டிராகன் மனித உருவுக்கு வந்தது. டிராகனின் இடத்தில் நின்றிருந்த மருதினி வில்வாவை நோக்கி நடந்தாள்.

"கடவுள் உனக்காக படைச்ச ஜோடி நான். என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?" என்று கேட்டாள்.

தொடரும் நட்புகளே
 
Niyayam pesura moonja paaru ivlo naal theeyoli pinnaadi suthikittu irundha podhu unnoda niyayam dharmam lam thongittu irundhucha
 
Super
 
Back
Top