sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 711
- Thread Author
- #1
9
மருதினியை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
வில்வாவை என் ஜோடியாக ஏற்க முடியாது என்று பல பேர் பார்த்திருக்க அவனை ஒதுக்கி வைத்து விட்டு போனவள் அவள்.
இப்போது அவளாக வந்து இந்த திருமணத்தையும் கெடுத்து விட்டாள். அங்கே இருந்த அனைவருக்கும் அவள் மீது வெறுப்பு பொங்கியது.
வில்வா அவள் முன்னால் வந்து நின்றான்.
"நான் இன்னைக்கு கல்யாணம் பண்ணியாகணும். நாளைக்கு என்னோட இளவரசர் மகாராஜாவா பதவி ஏற்க போறாரு. நான் அவரோட சேனாதிபதியா பதவி ஏற்கணும். என்னோட நேரத்தை ஏன் வீணடிக்கிற?" என்று கேட்டான்.
மன்னர்களை தவிர மற்ற அனைவரும் திருமணமானால்தான் பதவிவேற்க முடியும். இன்னும் இந்த நாட்டு இளவரசனுக்கு திருமணம் ஆகவில்லை. அவன் சரியான பொம்பளை பொறுக்கி. அந்தப்புரத்தில் எப்போதும் ஐம்பது பெண்களையாவது வைத்திருப்பான். அப்படிப்பட்டவன் திருமணம் செய்வானா? அதுவும் இல்லாமல் அவனின் ஜோடியும் இன்னும் அவன் கண்ணில் படவில்லை.
தன்னிடம் கோபமாக பேசிய வில்வாவிடம் "நீ என்னை கல்யாணம் பண்ணிக்க.." என்றாள் மருதினி. அவள் சொன்னதை கேட்டு அவன் மட்டுமில்லாமல் அந்த மொத்த கூட்டமும் அதிர்ந்தது.
'இவள் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் இந்த நாட்டின் எதிர்கால சேனாதிபதி என்ன நாய்க்குட்டியா?' என்று அவர்களுக்குள் கோபம் பொங்கியது.
வில்வா பெருமூச்சு விட்டான். "என்னோடு விளையாட உனக்கு என்ன இவ்வளவு ஆசை?" என்று கேட்டான்.
நீல டிராகன் நாட்டின் இளவரசனுக்கு காதலியாக இருப்பவள் எதற்காக ஒரு சாதாரண சேனாதிபதியை ஜோடியாக ஏற்க வேண்டும்?
இவனும்தான் ஒரு காலத்தில் காதல், சோல்மேட், கடவுள் படைத்த ஜோடி என்றெல்லாம் கற்பனை கோட்டை கட்டிக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது புத்தி தெளிந்து விட்டது.
பதவி பணம் இதெல்லாம்தான் அனைவரையும் ஆட்டி படைக்கிறது, மனித உலகம் கேவலமாக இருக்கிறது என்று சொல்லி இவர்களின் மூதாதையர்கள் டிராகன் ஆட்சியை கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் இப்போது டிராகன் உலகத்திலும் அதே தவறுகள்தான் நடக்கின்றன.
வில்வாவை நெருங்கி அவன் நெஞ்சின் மீது கை வைத்த மருதினி "விளையாட்டு இல்ல. உனக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்டதும் என்னால பொசசிவ் தாங்க முடியல. அதனால ஓடி வந்துட்டேன்.." என்று சொன்னாள்.
வில்வாவின் அருகில் நின்றிருந்த ஒருவன் "இவங்களையே கல்யாணம் பண்ணிக்கங்க. நல்ல நேரம் போயிட்டு இருக்கு.." என்று சொன்னான்.
ஆனால் வில்வாவுக்கு இவள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. எப்படி திருமணம் செய்ய முடியும்?
"நீ என்னை கல்யாணம் பண்ண நான் என்ன செய்யணும்? நெருப்புல இறங்கணுமா இல்ல கடல்ல குதிக்கணுமா?" என்று கேட்டாள் மருதினி.
இவன் அவளின் கையைப் பிடித்து தனியே அழைத்துப் போனான்.
தனியே வந்த பிறகு அவளை விட்டு விட்டு இரண்டடி தள்ளி நின்றான்.
"நீ என்ன கணக்கு போட்டு இங்கே வந்திருக்கன்னு எனக்கு தெரியல ஆனா நீயும் நானும் அந்த டிராகன் கடவுளின் முன்னாடி சத்திய பிரமாணம் செஞ்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் உன்னையும் என்னையும் எந்த விதியாலும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரிக்க முடியாது. உனக்கு இதுதான் வேணுமா?" என்று கேட்டான்.
இவளின் நெஞ்சில் பழிவாங்கும் உணர்ச்சி நிரம்பியிருந்தது. அவளுக்கு தீயொளியையும் அவனின் புது ஜோடியையும் கொல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி இவனோடு இணைவதுதான். இவனை திருமணம் செய்தால் நீல டிராகன் நாட்டை பழிவாங்கலாம் என்று கணக்கு போட்டிருந்தாள். அதற்காகதான் இங்கே வந்திருந்தாள்.
"என்னோட காதலை நான் இன்னைக்குதான் உணர்ந்தேன். எனக்கு மறு வாய்ப்பு கொடுக்க மாட்டியா?" என்று வில்வாவை பார்த்து கொஞ்சலாக கேட்டாள்.
இவன் அரை மனதாக அவளின் கையை பிடித்தான். "நீ வேற ஏதாவது திட்டம் போட்டு இங்கே வந்திருந்தா அது எதுவும் நடக்காது.." என்று சொல்லிவிட்டு அவளை மணமேடைக்கு இழுத்துப் போனான்.
'இனி நானும் சிவப்பு டிராகன் நாட்டை சேர்ந்தவள். இந்த நாட்டுக்கு எப்படி நீல டிராகன்கள் எதிரியோ அதே போல்தான் எனக்கும் நீல டிராகன்கள் எதிரி!' என்று மனதுக்குள் சொன்னாள்.
இவர்கள் மணமேடைக்கு வந்த பொழுது அங்கிருந்த பிணத்தை சுத்தம் செய்து விட்டார்கள். ஆனால் டிராகன்களின் நாசியில் ரத்தத்தின் வாசம் தெளிவாய் மோதியது. அநியாயமாக ஒரு கொலையை செய்து விட்டாளே என்று மருதினி மீது அனைவருக்கும் கோபம் பொங்கியது. அனைவருமே வில்வாவுக்காக அவளை பொறுத்துக் கொண்டார்கள்.
வில்வா சங்கடமான மனதோடு மருதினியை திருமணம் செய்தான். எதிரில் இருந்த நெருப்பின் மீது கையை நீட்டி இருவரும் சத்ய பிரமாணம் செய்தார்கள்.
'டிராகன் கடவுள்தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்!' என்று மனதுக்குள் வேண்டி கொண்டான் வில்வா.
வேறு எந்த பிரச்சனை வந்தாலும் அவன் தாங்கிக் கொள்வான். உடனிருந்து செய்யும் துரோகம் அவனை உயிரோடு கொன்றாலும் கொன்றுவிடும்.
திருமணம் செய்த இருவரும் அரண்மனைக்கு கிளம்பினார்கள். அந்த நாட்டின் இளவரசன் அக்னியான் இவனுக்காக காத்திருந்தான். ஆனால் மணமகளாக வந்தவளை இவனும் எதிர்பார்க்கவில்லை. அவ்வப்போது நீல டிராகன்களும் சிவப்பு டிராகன்களும் ஜோடியாவது இயல்புதான். இந்த இரு கூட்டத்திற்கும் இடையில் இருக்கும் பகையை குறைப்பதற்காகதான் டிராகன் கடவுள் இப்படி ஜோடிகளை தேர்ந்தெடுக்கிறார் என்று டிராகன் நாட்டு பெரிய மனிதர்கள் சொன்னார்கள்.
அக்னியானும் வில்வாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். தோழனை வேண்டாம் என்று சொல்லிப் போன ஒருத்தி இப்போது அவனை திருமணம் செய்து வந்திருப்பது அக்னியானுக்கும் சந்தேகத்தை கொடுத்தது.
"எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி!" என்று சொன்ன வில்வாவை தன்னோடு கட்டியணைத்து "வாழ்த்துக்கள்!" என்று சொன்னான் அக்னியான்.
"உங்களுக்காகதான் நான் கல்யாணத்தை பண்ணி இருக்கேன்.." என்று அவனின் காதோடு சொன்னான் வில்வா.
அவன் சொன்னது மருதினியின் செவிகளிலும் தெளிவாகவே விழுந்திருந்தது. இவன் மனதை வெல்ல இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று நினைத்தாள்.
அந்த கோட்டையை சுற்றி ஏகப்பட்ட அரண்மனைகள் இருந்தன. அதில் ஒரு அரண்மனை வில்வாவுக்கு சொந்தமானது.
வில்வாவின் பெற்றோர் இருவரும் நீல டிராகன் நாட்டோடு நடந்த சண்டையின் போது கொல்லப்பட்டு இறந்து போனார்கள். அதெல்லாம் பழைய கதை.
தனது புது மனைவியை தன் அரண்மனைக்கு அழைத்து போனான் வில்வா.
"இதுதான் என்னோட வீடு.." என்றவன் "எனக்கு வேலை இருக்கு.." என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
அந்த அரண்மனையில் பணிபுரிவோர் இவளை நெருங்கி "உங்களுக்கு எல்லா உதவியும் செய்ய நாங்க தயாரா இருக்கோம்.." என்று சொன்னார்கள்.
இவள் வில்வாவின் அறை எங்கே இருக்கிறது என்று கேட்டு அவன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.
அந்த அறை முழுக்க வில்வாவின் வாசம் வீசியது.
வில்வாவின் மனது இவளுக்கும் புரிந்தது. சாதாரணமாக மானிட பெண்கள் தங்களது கன்னித்தன்மையை இழந்து விட்டு வேறொரு மனிதரை திருமணம் செய்து கொள்வது அவ்வளவு மோசமான விஷயம் இல்லை.
ஆனால் டிராகன் நாட்டில் அதுவும் ஒரு பெண் டிராகன் தனது கன்னித்தன்மையை இழந்து விட்டு ஒரு சக டிராகனை திருமணம் செய்வதே ஒரு குற்றம் போலதான். கன்னித்தன்மையை இழந்ததற்காக பல பெண் டிராகன்களை இதற்கு முன் தூக்கில் ஏற்றி கொன்றிருக்கின்றார்கள் அவர்களின் ஜோடி ஆண் டிராகன்கள்.
மனித உலகை விடவும் இந்த டிராகன் உலகம் மோசம். இந்த அரசன் அக்னியானை போல பல பெண்களோடு ஆண்கள் உறவு கொள்ளலாம். ஆனால் கற்பை இங்கேயும் பெண்கள் மட்டும்தான் பாதுகாக்க வேண்டும்.
ப்ளேபாய் டிராகன்களை திருமணம் செய்த பல பெண் டிராகன்களுக்கு இந்த ஆண் டிராகன்களை எல்லாம் அந்த டிராகன் கடவுள் கேட்க மாட்டாரா என்று கோபம்தான்.
எது எப்படியோ வில்வாவுக்கு நாம் செய்த துரோகத்திற்கு நாம்தான் அவனிடம் மன்னிப்பை பெற்றாக வேண்டும் என்று மருதினிக்கு புரிந்தது.
நீல டிராகன் நாட்டில்..
தனக்கு கொடுக்கப்பட்ட புது அறையின் குளியலறையில் குளித்துவிட்டு வெளியே வந்தாள் அதரா. புது கவுன் ஒன்றை அணிந்திருந்தாள். அதை பணிப்பெண் ஒருத்தி கொடுத்துவிட்டு போயிருந்தாள்.
குளித்துவிட்டு வந்தபோது அந்த அறையின் டேபிள் மீது உணவு தட்டு இருந்தது. பெரிய தட்டு. அதில் விதவிதமான உணவுகள் பல கிண்ணங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
"நாலஞ்சி பேர் சாப்பிடலாம் போல. இதை யாரு இங்கே கொண்டு வந்து வச்சது?" என்று அதரா கேட்ட நேரத்தில் "விருந்தாளிக்காக நான்தான் கொண்டு வர சொன்னேன்.." என்றான் அங்கே வந்த தீயொளி.
"இவ்வளவை என்னால சாப்பிட முடியாது.." என்றவளிடம் "சரி மீதியை எனக்கு ஊட்டி விடு.." என்றான் அவன்.
"நான் ஏன் அதை செய்யணும்?" என்று கேட்டவளிடம் "ஒரு அம்மா போல சோறு ஊட்ட மாட்டியா? எனக்கு சின்ன வயசுல இருந்தே அம்மா இல்ல.." என்று அவளை கருணையால் கவிழ்க்க பார்த்தான்.
தொடரும் நட்புகளே